ஐஸ்வர்யா இப்படிப்பட்டவர் தான்! தனுஷின் வைரல் பேட்டி
நட்சத்திர தம்பதிகளான தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் விவாகரத்து செய்துக்கொள்ளப்போவதாக அறிவித்துவிட்டனர்.
அவர்கள் வெளியிட்ட அறிக்கையில், நண்பர்களாகவும், தம்பதிகளாகவும், பெற்றோர்களாகவும், நலம் விரும்பிகளாகவும் 18 வருடங்கள் இணைந்திருந்தோம். வளர்ச்சி, புரிதல், அனுசரிப்பு என பயணம் இருந்தது.
இன்று நம் பாதைகள் பிரியும் இடத்தில் நிற்கிறோம். நானும் ஐஸ்வர்யாவும் ஜோடியாகப் பிரிந்து தனிமனிதர்களாக எங்களைப் புரிந்து கொள்ள நேரம் ஒதுக்க முடிவு செய்துள்ளோம். தயவுசெய்து எங்கள் முடிவை மதித்து, இதைச் சமாளிக்கத் தேவையான தனியுரிமையை எங்களுக்குத் தாருங்கள். அன்பைப் பரப்புங்கள் என பதிவிட்டிருந்தனர்.

இந்த செய்தி அவர்களது ரசிகர்கள் மட்டுமின்றி ஒட்டுமொத்த திரையுலகை உலுக்கியது, இந்நிலையில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் தன்னுடைய மனைவி குறித்து தனுஷ் அளித்த பேட்டி வைரலாகி வருகிறது.
அதில், எனக்கு ஐஸ்வர்யாவின் எளிமை மிகவும் பிடிக்கும். நாம் அவரது அப்பா ரஜினியை எளிமையானவர் என நினைக்கிறோம்.
ஆனால் ஐஸ்வர்யா அவரை விடவும் எளிமையானவர். அவரது அப்பாவை விட அவர் 100 மடங்கு எளிமையானவர். அவர் அனைவரிடத்திலும் ஒரே மாதிரி இருப்பார். யாரை வேண்டுமானாலும் நண்பர்களாக வழிநடத்துவார் என புகழ்ந்துள்ளார்.
இப்படி ஒருவரையொருவர் புரிந்து கொண்டு வாழ்ந்த தம்பதிகளா விவாகரத்து செய்யப்போகிறார்கள் என அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளனர் அவரது ரசிகர்கள்.
