வலையில் சிக்கிய உலகின் மிகப்பெரிய திமிங்கலம்! உடனே மீனவர் என்ன செய்தார் தெரியுமா?
இந்தியாவின் ஆந்திரா மாநிலம் விஷாகப்பட்டினத்தில் மீனவரின் வலையில் உலகின் மிகப்பெரிய திமிங்கலம் ஒன்று சிக்கிய அபூர்வ நிகழ்வு நடந்துள்ளது.
அதாவது, தண்டாடி கடற்கரை பகுதியில் மீனவர் ஒருவர் நேற்று மீன் பிடிக்க சென்றுள்ளார், நீண்ட நேரமாக ஆழ்கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்த போது, அவரது வலையில் திடீரென மிகப்பெரிய மீன் ஒன்று சிக்கியுள்ளது.
மொத்த படகையும் இழுத்துச்செல்லும் அளவுக்கு பெரிய மீனாக இருந்துள்ளது, உடனடியாக மீனை பிடித்துவிட்டு மீனவர்கள் வேகமாக கரைக்கு வந்துள்ளனர்.
கரைக்கு வந்த போது தான் அது திமிங்கலம் என்று தெரியவந்தது, அதை விற்றால் பல கோடி ரூபாய் வரை கிடைக்கும் என்றாலும், மீனவர் அதனை கடலில் விட முடிவு செய்தார்.
உடனடியாக இதுகுறித்து விலங்குகள் நலத்துறை, கடலோர காவல்படைக்கு தகவல் அளித்ததும் விரைந்து வந்த நபர்கள், திமிங்கலத்தை கடலில் சேர்த்தனர்.
ராட்சத திமிங்கலத்தின் எடை 2 டன் இருந்ததும், நீளம் 17 அடி இருந்ததும் குறிப்பிடத்தக்கது.
