மீண்டும் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் விஜே தீபிகா நடிக்க வருகிறாரா? அவரே சொன்ன பதில்
பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் மீண்டும் நடிக்க வருகிறீர்களா என்று ரசிகர்கள் கேட்ட கேள்விக்கு விஜே தீபிகா தெளிவான பதிலை கொடுத்துள்ளார்.
தமிழ் சின்னத்திரையில் பிரபலமான சீரியல் பாண்டியன் ஸ்டோர்ஸ். இந்த சீரியல் அண்ணன், தம்பிகளின் ஒற்றுமையை மையப்படுத்தி உருவாகியுள்ளது.
மேலும் இந்த சீரியல் அதிக எண்ணிக்கையிலான கூட்டு குடும்ப பிரியர்களை ஈர்த்துள்ளது. இந்த சீரியலில் ஐஸ்வர்யா என்ற கதாபாத்திரத்தில் நடித்து வந்தவர் விஜே தீபிகா.
இவருக்கு முகத்தில் அதிக பருக்கள் இருந்ததால் தனியார் தொலைக்காட்சி கொடுத்த நேரத்திற்குள் அதனை சரிசெய்ய முடியாத காரணத்தினால் அவர் சீரியலில் இருந்து அவர் நீக்கப்பட்டார்.
இதனையடுத்து தற்போது ஐஸ்வர்யா கதாபாத்திரத்தில் நடிகை சாய் காயத்ரி நடித்து வருகிறார்.
இந்நிலையில் ரசிகர்களுடன் உரையாடிய தீபிகாவிடம் ரசிகர் ஒருவர் மீண்டும் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் நடிக்க வருவீர்களா என கேட்டுள்ளார். அதற்கு தீபிகா நிச்சயம் வாய்ப்பே இல்லை என தெரிவித்துள்ளார்.