2 கப் கோதுமை இருந்தாவே போதும்.. குழந்தைகளுக்கு பிடித்தமான பாஸ்தா செய்யலாம்- சூப்பரான ரெசிபி
தினமும் காலையில் இட்லி, தோசை செய்து கொடுத்தால் குழந்தைகள் பெரிதாக விரும்பி சாப்பிடமாட்டார்கள்.
இவற்றை தவிர்த்து விட்டு அடிக்கடி வீட்டில் ஏதாவது புது விதமான உணவுகளை செய்து கொடுத்தால் குழந்தைகள் நிச்சயம் விரும்பி சாப்பிடுவார்கள்.
அதற்காக தனியாக பொருட்கள் வாங்க வேண்டியதில்லை. மாறாக வீட்டில் கோதுமை மாவு இருந்தாலே போதும்.
அந்த வகையில், கோதுமை வைத்து எப்படி குழந்தைகளுக்கு பிடித்த பாஸ்தா செய்யலாம் என்பதனை தொடர்ந்து கட்டுரையில் பார்க்கலாம்.
கோதுமை பாஸ்தா
தேவையான பொருட்கள்
- கோதுமை மாவு - 2 கப்
- பூண்டு - 4
- இஞ்சி - 1 துண்டு
- பச்சை மிளகாய் - 3
- வெங்காயம் - 1
- தக்காளி - 1
- குடைமிளகாய் - 1/4 கப்
- மிளகாய் தூள் - 1/2 ஸ்பூன்
- மஞ்சள் தூள் - 1/4 ஸ்பூன்
- கரம் மசாலா - 1/2 ஸ்பூன்
- தக்காளி சாஸ் - 2 ஸ்பூன்
- உப்பு - சுவைக்கேற்ப
- கொத்தமல்லி - சிறிதளவு
- கறிவேப்பிலை - சிறிதளவு
- தண்ணீர், எண்ணெய் - தேவையான அளவு
எப்படி ஈஸியா செய்யலாம்?
முதலில், ஒரு அகலமான கிண்ணத்தை எடுத்து அதில் கோதுமை மா, உப்பு, எண்ணெய், தண்ணீர் என்பவற்றை சேர்த்து நன்றாக சப்பாத்தி மா பதத்திற்கு பிசைந்து கொள்ளவும்.
பிறகு மூடி வைத்து, சரியாக 15 நிமிடங்கள் வரை ஊற வைக்கவும். 15 நிமிடங்களின் பின்னர் கோதுமை மா கொஞ்சம் மேலோட்டமாக தூவி கத்தியால் சிறிய சிறிய துண்டுகளாக வெட்டி எடுத்து கொள்ளவும்.
அடுப்பில் ஒரு பாத்திரத்தை வைத்து அதில் நீரை நிரப்பி கொதிக்க விடுங்கள். அந்த நீராவியில் வெட்டி வைத்திருக்கும் கோதுமை துண்டுகளை போட்டு அவித்து எடுங்கள்.
சரியான பதத்திற்கு வெந்து வந்தததும் அவைகளை ஒரு கிண்ணத்தில் கொட்டி நன்றாக இரண்டு முறை கழுவி எடுத்து கொள்ளவும்.
இதனை தொடர்ந்து அகலமான கடாய் ஒன்றை அடுப்பில் வைத்து எண்ணெய் விட்டு சூடானதும் தாளிப்புக்கு தேவையான பொருட்களை ஒன்றன் பின் சேர்க்கவும்.
வெங்காயம் வதங்கிய பின்னர் குடைமிளகாய், தக்காளி சேர்த்து இன்னும் கொஞ்ச நேரம் கிளறவும். காரம் தேவையென்றால் அதற்கேற்றாற் போல் மசாலாக்களை சேர்த்து கொள்ளுங்கள்.
இறுதியாக வெட்டி அவித்து வைத்திருக்கும் கோதுமை பிஸ்தாக்களை தாளிப்புடன் சேர்த்துகொத்தமல்லி தழை தூவி இறக்கினால் காரசாரமான கோதுமை பிஸ்தா தயார்!
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |