சர்க்கரை நோயாளிகளின் வரப்பிரசாதம் கோதுமை! அதனால் தீமைகளும் இருக்கு- உங்களுக்கு தெரியுமா?
உலகிலேயே அதிகம் பயிரிடப்படும் தானியங்களில் ஒன்றான கோதுமையில் நம் உடலுக்கு தேவையான சத்துக்கள் அதிகம் நிறைந்துள்ளன.
உடல் எடையை குறைக்க நினைப்பவர்கள், சர்க்கரை நோயாளிகள் அதிகம் கோதுமை நிறைந்த உணவுகளை எடுத்துக் கொள்வார்கள்.
இதில் பல சத்துக்கள் இருந்தாலும் சுத்திகரிக்கப்படும் போது, அவை நீக்கப்படுகின்றன என்பதே அதிர்ச்சி தரும் உண்மை.
அதிலும் குறிப்பாக இதில் உள்ள பைடிக் அமிலம் காரணமாக மாங்கனீசு சத்து மிக குறைவாக உறிஞ்சப்படுகிறதாம்.
மேலும் அரிசியுடன் ஒப்பிடும் போது கோதுமை செரிமானம் ஆக அதிக நேரம் எடுத்துக் கொள்ளும், இதனால் ஒரு சிலருக்கு வயிறு வீக்கம், வயிறு உப்புசம், வயிற்றுப்போக்கு போன்ற பிரச்சனைகள் ஏற்பட வாய்ப்பு உள்ளது.
இதுதவிர குளூட்டன் அலர்ஜி உள்ளவர்கள் கோதுமை மற்றும் கோதுமை பொருட்களை தவிர்க்க வேண்டுமாம்.
இதற்கிடையே Wheat Belly என்ற புத்தகம் ஒன்றில், நீரிழிவு, உடல் பருமன் மற்றும் இதய நோய்களுக்கு கோதுமையும் ஒரு காரணம் என்றும், கோதுமை உணவைத் தவிர்த்ததால் மூட்டுவலி, கொலஸ்ட்ரால் போன்ற நோய்களில் இருந்தும் விடுபடலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.