அவசரமாகவும் ருசியாகவும் சமைக்க வேண்டுமா? ரொம்ப ஈஸியா செய்யலாம் கோதுமை தோசை
பொதுவாகவே நம் வீடுகளில் காலை அல்லது இரவு வேளைகளில் தோசைதான் உணவாக இருக்கும். அந்த தோசையில் ஆரோக்கியமாகவும் சுவையாகவும் இருந்தாலும் சிறியவர் முதல் பெரியவர்கள் வரை விரும்பி உண்ணும் உணவாக இருக்கும்.
அப்படி தோசை சாப்பிடும் ஆசையை அதிகரிக்க வைக்கும் கோதுமை மா தோசையை செய்து பாருங்க.
தேவையான பொருட்கள்
கோதுமை மாவு- ஒரு கப்
வெங்காயம் -1 ( நறுக்கியது)
தயிர் - 2 தேக்கரண்டி
பச்சை மிளகாய் - 2 (நறுக்கியது)
கருவேப்பிலை - சிறிதளவு
உப்பு, எண்ணேய் - தேவையான அளவு
செய்முறை
முதலில் கோதுமை மாவுடன் தயிர், சிறிது தண்ணீர் சேர்த்து கலக்கவும்.
பின்னர் மாவில் உப்பு கலந்து கொஞ்ச நேரம் கழித்து வெங்காயம், கறிவேப்பிலை, பச்சை மிளகாய் என்பவற்றை சேர்த்து நன்கு கலக்கவும்.
பின்னர் வழக்கமாக தோசை ஊற்றுவது போல தோசைக்கல்லில் எண்ணெய் ஊற்றி எடுத்தால் சுவையான மொறுமொறுப்பான கோதுமை தோசை தயார்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |