இன்று முதல் Whatsapp இந்த சாதனங்களில் வேலை செய்யாது! உடனே இதை செய்யுங்க..
பல கோடி மக்கள் அதிகமாக பயன்படுத்தும் செயலிகளில் ஒன்று வாட்ஸ் அப் (whatsupp). குறுந்தகவல்களை பரிமாரிக்கொள்ள இந்தியாவில் வாட்ஸ் அப் செயலி முன்னிலை வகிக்கிறது.
பாதுகாப்பு மற்றும் அம்சங்களின் பட்டியலை மேம்படுத்த வாட்ஸ அப் ஆனது ஒவ்வொரு இயங்குதளத்திலும் தொடர்ந்து புதுப்பிக்கிறது. பழைய ஸ்மார்ட்போன்களில் மெட்டாவுக்கு (meta) சொந்தமான செய்தியிடல் பயன்பாட்டை தகுதி பெறுவதை நிறுத்திவிடும்.
இதனிடையே, வாட்ஸ் அப் ஆனது சமீபத்தில் தனது சிஸ்டம் அப்டேட்களை அறிவித்து இருக்கிறது. இதனால், பழைய ஓஎஸ்-ல் (ios) இயங்கும் சாதனங்களில் வாட்ஸ் அப் இயங்காது.
இவை, ஆண்ட்ராய்டு 4.0.3 ஐஸ்கிரீம் சாண்ட்விச், ஐஓஎஸ் (ios) 9 உள்ளிட்ட சாதனங்களில் நவம்பர் 1, 2021 முதல் இயங்காது என தெரிவித்துள்ளது. அதேபோல் அதற்கு முன்பு பழைய சாதனங்களுக்கான ஆதரவை டிசம்பர் 2020-ல் அறிவித்தது.
மேலும், வாட்ஸ்அப் அதன் கேள்விகள் பக்கத்தில் ஆண்ட்ராய்டு ஓஎஸ் வாட்ஸ்அப் அதன் கேள்விகள் பக்கத்தில் ஆண்ட்ராய்டு ஓஎஸ் 4.1, ஐபோன் ஐஓஸ் 10, கெய் ஓஎஸ் 2.5.1 மற்றும் ஜியோபோன், ஜியோபோன் 2 ஆகிய சாதனங்களில் இயங்கும் என கூறப்பட்டுள்ளது.
இதன் மூலம் வாட்ஸ்அப் தங்கள் சாதனத்தில் தொலைபேசி எண்ணை பதிவு செய்ய அனுமதிக்கிறது. ஒரு நேரத்தில் ஒரு சாதனத்தில் மட்டுமே வாட்ஸ்அப் செயல்படுத்த முடியும்.
இதனைத்தொடர்ந்து, நவம்பர் 1-ற்கு பிறகு உங்கள் சாதனம் மேம்படுத்தவில்லை என்றால் வாட்ஸ்அப் உங்கள் ஸ்மார்ட்போனில் இயங்காது என்பதை அறிந்து கொள்ள வேண்டும்.
அதன்பின் உங்கள் சாதனத்தில் வாட்ஸ்அப் மூலம் செய்திகளை பெறவும் அனுப்பவும் முடியாது. புதிய தொலைபேசியை வாங்குவதற்கான நேரம் இதுவாகும். அல்லது சாஃப்ட்வேர் புதுப்பிக்க தகுதியானதாக இருந்தால் அதை உடனடியாக செய்து கொள்ளவும்.
பழைய OS பதிப்புகளில் இயங்கும் சில Android, iOS மற்றும் KaiOS சாதனங்களுக்கான ஆதரவை WhatsApp இன்று முதல் நீக்க உள்ளது.
எந்தெந்த சாதனங்களில் பயன்படாது?
SAMSUNG
சாம்சங் கேலக்ஸி டிரெண்ட் லைட் 2, கேலக்ஸி எஸ்2, கேலக்ஸி எஸ்3 மினி, கேலக்ஸி எக்ஸ்கவர் 2, கேலக்ஸி கவர், கேலக்ஸி ஏஸ்2
LG
எல்ஜி லூசிட் 2, ஆப்டிமஸ் எஃப்7, ஆப்டிமஸ் எஃப்5, ஆப்டிமஸ் எல்3 2, ஆப்டிமஸ் எல்7, ஆப்டிமஸ் எல்7 டூயல், ஆப்டிமஸ் எல் 7 2, ஆப்டிமஸ் எஃப் 6, ஆப்டிமஸ் எல்4 2 டூயல், ஆப்டிமஸ் எஃப் 3, ஆப்டிமஸ் எல்4 2, ஆப்டிமஸ் எல் 2 2, ஆப்டிமஸ் நைட்ரோ எச்டி, 4எக்ஸ் எச்டி, ஆப்டிமஸ் எஃப்3 க்யூ
SONY
சோனி எக்ஸ்பீரியா மிரோ, சோனி எக்ஸ்பீரியா நியோஎல், எக்ஸ்பீரியா ஆர்க் 5 அதேபோல் ஆல்காடெல் ஒன் டச் எவோ 7, ஆர்கோஸ் 53 பிளாட்டினம், எச்டிசி டிசைர் 500, கேட்டர்பில்லர் கேட் பி15, விகோ கங்க் ஃபைவ், விகோ டார்க் நைட், லெனோவா ஏ820, யூஎம்ஐ எக்ஸ் 2 ஆகிய சாதனங்களில் இயங்காது.