WhatsApp Web: இன்டர்நெட் வசதி இல்லாமலும் பயன்படுத்தலாமாம்! சூப்பரான வசதி அறிமுகம்
இன்றைய டிஜிட்டல் உலகில் சிறியவர்கள் முதல் பெயரியவர்கள் வரை அனைவருமே மொபைல் போனை பயன்படுத்துகின்றனர்.
நம் கைகளில் ஆறாம் விரலை போல மொபைல் போன்கள் அலங்கரிக்கின்றன, உலகில் என்ன நடந்தாலும் நம் வீட்டின் மூலையில் இருந்தபடியே அனைத்தையும் தெரிந்து கொள்ளலாம்.
ஒருவரையொருவர் தொடர்பு கொள்ள சமூக வலைத்தளங்கள் உதவியாக இருக்கின்றன, படங்கள், வாய்ஸ் மெசேஜ்கள், டெக்ஸ்ட் மெசேஜ்கள், ஆடியோ மற்றும் வீடியோ அழைப்புகள் மேற்கொள்ள உதவி வருகிறது வாட்ஸ்அப்.
இதனை மொபைல் மட்டுமல்லாது கணினி உட்பட நான்கு சாதனங்களை கனெக்ட் செய்து வாட்ஸ்அப் வெப் மூலம் பயன்படுத்தும் வசதியும் இருக்கிறது.
இந்நிலையில் ஸ்மார்ட் போன்களில் இணைய இணைப்பு இல்லாமல் இருந்தாலும், வாட்ஸ் அப் வெப் மூலம் இணைக்கப்பட்டுள்ள சாதனங்களை பயன்படுத்த முடியும் என மெட்டா நிறுவனம் அறிவித்துள்ளது.
இந்த புதிய அம்சத்தின் மூலம் அதிகபட்சம் 14 நாட்கள் வரையில், பயன்படுத்த முடியும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.