Whatsapp-ல் இப்படி ஒரு அம்சம் உள்ளதா?
உலகில் வாட்ஸ் அப் செயலியை 2 பில்லியன் மக்கள் பயன்படுத்துகின்றனர்.
மேலும் பயனாளர்களுக்கு அடிக்கடி புதிய அப்டேட்களை வழங்கும் வாட்ஸ் அப் நிறுவனம் தற்போது, 3 சிறப்பான அப்டேட்களை வாட்ஸ் அப் அறிமுகம் செய்துள்ளது.
அதில், வாட்ஸ்அப் வெப் போட்டோ எடிட்டர், ஸ்டிக்கர் பரிந்துரைகள் மற்றும் லிங்க் பிரிவியூவ் போன்றவை...
நமக்கு வரும் மெசேஜ்களை ஒவ்வொரு முறையும் நமது ஸ்மார்ட் போனை திறந்து பார்க்க வேண்டிய தேவையை மாற்றியதே இந்த வாட்ஸ்அப் வெப் தான்.
ஆரம்பத்தில் இதில் வரும் மெசேஜ்களை பார்க்கவும், அதற்கு பதிலளிக்கும் வசதி மட்டுமே இருந்தது.
ஆனால், இனி நீங்கள் நினைக்கும் பலவற்றையும் உங்கள் வாட்ஸ்அப் வெப் மூலம் எளிதாக செய்யலாம்.
குறிப்பாக நீங்கள் யாருக்காவது போட்டோவை எடிட் செய்து அனுப்ப வேண்டும் என்றால், இனி உங்களின் மொபைலில் வாட்ஸ்அப்பை திறந்து எடிட் செய்ய வேண்டிய அவசியமில்லை.
உங்கள் கணினியில் பயன்படுத்தும் வாட்ஸ்அப் வெப் மூலம் போட்டோக்களை எடிட் செய்ய 'வாட்ஸ்அப் வெப் போட்டோ எடிட்டர்' வசதி இந்த அப்டேட்டில் தரப்பட்டுள்ளது.
இது மட்டுமின்றி சமூக வலைத்தளங்களில் இருந்து நீங்கள் வாட்ஸ்அப்பிற்கு பகிரும் எந்த லிங்க்காக இருந்தாலும் இனி அவற்றிற்கு பிரிவியூ(PREVIEW) காட்டப்படும்.
குறிப்பாக செய்திகள், ட்விட்டர் பதிவுகள், வீடியோ லிங்க் போன்றவற்றை பகிரும்போது அதில் விளக்கமாக பிரிவியூ(PREVIEW) காட்டப்படும்.
இதன்மூலம் யார் உங்களுக்கு லிங்க் அனுப்பினாலும், அது எதை பற்றியது என உங்களால் தெளிவாக அறிய முடியும்.
அடுத்தாக நமது உணர்ச்சிகளை எளிதில் பிறருக்கு உணர்த்த கூடியவை இந்த ஸ்டிக்கர்கள் தான்.
பிறருடன் சாட் செய்யும்போது ஸ்டிக்கர் பயன்படுத்தவில்லை என்றால் நிச்சயம் நமக்கு சலிப்பு ஏற்பட்டு விடும்.
எனவே இனி உங்களின் உணர்ச்சிகள் என்னவென்று டைப் செய்தால் போதும், உங்களுக்கான வாட்ஸ்ஆப் ஸ்டிக்கர்கள் பரிந்துரையாக வந்து குவிந்து விடுமாம்.
இந்த அம்சம் ஆண்ட்ராய்டு மற்றும் ஐபோன் ஆகிய இரண்டிலும் இந்த புதிய அப்டேட்கள் செயல்படும் என வாட்ஸ்அப் நிறுவனம் தெரிவித்துள்ளது.