Whatsapp: தெரியாத எண்ணிலிருந்து வரும் செய்திகளை எப்படி தடுப்பது? புதிய அம்சம்
வாட்ஸ்அப்பில் தெரியாத கணக்குகளிலிருந்து வரும் செய்திகளை தடுக்க WhatsApp புதிய அம்சத்தை அறிமுகப்படுத்த உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
WhatsApp புதிய அப்டேட்
இன்றைய காலத்தில் பெரும்பாலான மக்களின் ஸ்மார்ட்போன் என்பது கையில் காணப்படுகின்றது. கடல்தாண்டி வெவ்வேறு நாடுகளில் இருக்கும் நபர்கள் கூட அருகில் இருப்பது போன்று பேசிக்கொள்ளும் அளவிற்கு வசதி உள்ளது.
ஆனால் இதில் தெரியாதவர்கள் கூட நமது வாட்ஸ்அப் கணக்கிற்கு செய்திகளை அனுப்ப முடியும். தற்போது வாட்ஸ்அப், ஸ்போம் மற்றும் தனியுரிமையை பாதுகாக்க புதிய பாதுகாப்பு அம்சத்தை அறிமுகப்படுத்தவுள்ளது.
ஆம் தெரியாத எண்களிலிருந்து வரும் செய்திகளை தானாகத் தடுக்க அனுமதிக்கும் அம்சத்தினை வெளியிடுவதற்கு சோதனை செய்து வருகின்றதாம்.
image: Joe Maring / Digital Trends
WABetaInfo படி, இந்த அம்சம் Android 2.24.20.16 இல் சில பீட்டா டெஸ்டர்களுக்கு கிடைக்கிறது. பயனர்கள் அமைப்புகள்> தனியார் தன்மை> மேம்பட்ட> அறியப்படாத கணக்கு செய்திகளைத் தடுக்க சென்று இதை செயல்படுத்தலாம். (privacy settings, Advanced section, new block unknown account messages).
இந்த அம்சம் செயல்படுத்தப்பட்டதும், இந்த அம்சம் பயனரின் தொடர்புகளில் சேமிக்கப்படாத கணக்குகளிலிருந்து வரும் செய்திகளை தானாகத் தடுக்கும்.
இந்த அம்சம் ஸ்பாம் செய்திகளைத் தடுக்க வடிவமைக்கப்பட்டுள்ள போதிலும், அறியப்படாத அனைத்து கணக்குகளிலிருந்தும் செய்திகளைத் தடுக்காது என்பது குறிப்பிடத்தக்கது.
அதற்கு பதிலாக, குறுகிய காலத்தில் அசாதாரணமாக அதிக எண்ணிக்கையிலான செய்திகளை அனுப்பும் போட் கணக்குகளை கண்காணித்து, ஸ்பாம் அதிகரிப்பைத் தடுக்கவும், ஸ்மார்ட்போன் செயல்திறனை மேம்படுத்தவும் உதவும்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |