செல்போன் தண்ணீரில் விழுந்துவிட்டால் உடனே என்ன செய்ய வேண்டும்?
செல்போன் தண்ணீரில் விழுந்துவிட்டால் உடனே என்ன செய்ய வேண்டும் என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.
இன்றைய காலத்தில் பரபரப்பாக சென்றுக்கொண்டிருக்கும் நபர்களுக்கு கையில் முக்கியமாக இருக்க வேண்டிய முக்கியமாக பொருளாக செல்போன் மாறிவிட்டது.
இவ்வாறு நாம் அவசாரமாக செல்லும் போது, எதிர்பாராத விதமாக தண்ணீருக்குள் விழும் சூழ்நிலை ஏற்பட்டுவிடும்.
இவ்வாறான தருணத்தில் உடனே நீங்கள் செய்ய வேண்டிய விடயத்தினை தெரிந்து கொண்டால் செல்போனை எந்தவொரு பாதிப்பும் இல்லாமல் மீட்டுக்கொள்ள முடியும்.
தண்ணீரில் விழுந்தால் என்ன செய்ய வேண்டும்?
மொபைல் போன் தண்ணீரில் விழுந்துவிட்டால் நேரம் கடத்தாமல் உடனே எடுத்துவிட வேண்டும். ஏனெனில் அதிர்ச்சியில் நீங்கள் எடுக்காமல் நீண்ட நேரம் தண்ணீருக்குள் விட்டிருந்தால் அதிகமாக சேதமடைந்துவிடும்.
தொலைபேசி தண்ணீரில் விழுந்த பின்பு நன்றாக வேலை செய்தாலும், அப்படியே நீங்கள் விட்டுவிடாமல் உடனே சுவிட் ஆப் செய்ய வேண்டும். ஏனெனில் மதர்போர்டு சேதமடைய அதிக வாய்ப்புகள் உள்ளது.
சுவிட் ஆப் செய்த பின்பு செல்போன் பாகங்களை தனித்தனியாக கழற்றிவிடவும். பேட்டரி, சிம், மெமரி கார்டு இவற்றினை வெளியே எடுத்துவிடவும். ஏனெனில் இவை தண்ணீரில் விழுந்தால் துருப்பிடித்து சேதமடைந்துவிடும்.
துணியால் அனைத்து பாகங்களையும் துடைக்க வேண்டும். தண்ணீர் உறிஞ்சும் காட்டன் துணியாக இருக்க வேண்டும். ஹெட்ஃபோன் ஜாக், சார்ஜிங் போர்டு இவற்றினை அழுத்தி துடைக்க வேண்டாம். மெதுவாக சுத்தம் செய்ய வேண்டும்.
தண்ணீரில் விழுந்த செல்போனை அரிசியில் வைப்பது நல்ல தீர்வாகும். அரிசிக்குள் குறித்த செல்போனை புதைத்தை வைக்கவும். இவை அப்படியே ஒரு இரண்டு நாட்கள் இருக்குமாறு வைத்துவிடவும். ஏனெனில் மீதம் உள்ள ஈரப்பதத்தை அரிசி உறிஞ்சிவிடும்.
ஹேர் ட்ரையரை பயன்படுத்தினால் செல்போனில் உள்ள தண்ணீர் ஆவியாகிவிடும் என்ற எண்ணத்தில் பயன்படுத்துவதை தவிர்க்கவும். இவை செல்போனையும், உள்ளே இருக்கும் பாகத்தையும் சூடாக்கும்.
இந்த முயற்சிகளுக்கு பின்பும் செல்போன் வேலை செய்யவில்லையெனில், சர்வீஸ் மையத்திற்கு சென்று மெக்கானிக்கிடம் உண்மையைக் கூறவும்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |