வாட்ஸ் ஆப்பில் டிஜிலாக்கர் அறிமுகம்.. பயன்படுத்துவது எப்படி?
வாட்ஸ் அப் செயலி அடிக்கடி ஏதாவது ஒரு புதிய அப்டேட்டை பயனாளர்களுக்கு வழங்கி வருகிறது.
அந்த வகையில் தற்போது வாட்ஸ் அப்பில் டி லாக்கர் வசதியை அறிமுகப்படுத்துகிறது. கல்விச் சான்றிதழ், ஆதாா் அட்டை, டிரைவிங் லைசன்ஸ் உள்ளிட்ட பல்வேறு முக்கிய ஆவணங்களை டிஜிட்டல் முறையில் சேமித்து வைப்பதற்காக இந்த டி லாக்கர் வசதியை அறிமுகப்படுத்த உள்ளது.
இச்சேவை வாட்ஸ்அப் MyGov ஹெல்ப் டெஸ்கில் கிடைக்கும் என மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப மையம் தெரிவித்துள்ளது.
இந்த சேவையை பயன்படுத்த வாட்ஸ் அப் மூலம் 9013151515 என்ற எண்ணுக்கு ‘Hi' என்று மெசேஜ் அனுப்ப வேண்டும்.
இதன் மூலம் அரசின் சேவைகளை மக்கள் எளிதில் பெறலாம். இதில், பான் கார்டு, ஓட்டுநர் உரிமம் மற்றும் வாகனப் பதிவுச் சான்றிதழ் போன்ற ஆவணங்களைப் பதிவிறக்கலாம்.
சிம்புவின் தந்தை நடிகர் டி. ராஜேந்தர் மருத்துவமனையில் திடீர் அனுமதி! அபாய கட்டத்தில் உள்ளாரா?