WhatsApp Safety Tips: மோசடிகளில் இருந்து தப்பிக்க என்ன செய்யலாம்?
சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை பெரும்பாலானவர்கள் சமூகவலைத்தளங்களுக்கு அடிமையாகிவிட்டார்கள், அதில் முக்கியமானது வாட்ஸ் அப்.
உலகில் என்ன நடந்தாலும் நம் விரலின் நுனியில் தெரிந்து கொள்கிறோம், அந்தளவுக்கு இணையத்தின் பயன்பாடு அதிகரித்து விட்டது.
அதேசமயம் இதை பயன்படுத்தி மோசடி செய்வதும் அதிகரித்துவருகிறது, இதில் இருந்து தப்பிப்பது எப்படி என்பது பற்றி தெரிந்து கொள்வோம்.
பயனாளர்களை ஏமாற்றுவதற்காக பலரும் தங்களை பெரிய நிறுவனம் போன்று காட்டிக் கொள்கிறார்கள், அதாவது தாங்கள் தலைசிறந்த நிறுவனம் என்றும், வங்கி தொடர்பான மெசேஜ்கள் போன்று Linkகளை அனுப்பிவிடுவார்கள், இதை பயன்படுத்தி உள்நுழையும் போது தகவல்கள் கேட்கப்படும், உங்கள் தகவல்களை திருடி ஏமாற்ற நேரிடலாம், எனவே வாட்ஸ் அப்பில் வரும் தேவையில்லாத எந்தவொரு Linkயையும் கிளிக் செய்ய வேண்டாம்.
இன்று வாட்ஸ் அப்பில் பல அம்சங்கள் வந்துவிட்டது, உங்களை யாராவது Groupல் இணைத்துவிடலாம், முன்பின் தெரியாத எண்ணில் இருந்து மெசேஜ் வரலாம், அந்த எண் வெளிநாட்டு எண் போன்றோ இருந்தாலும், உங்களுக்கு ஏதேனும் சந்தேகம் இருந்தாலும் பதில் அளிக்க வேண்டாம்.
வங்கியில் இருந்து அனுப்பவது போன்ற மெசேஜ்கள் வந்தாலும் ஒருமுறை இருமுறை பரிசோதிக்கவும், எடுத்தவுடனேயே உங்களது தனிப்பட்ட தகவல்களை தரவேண்டாம், குறிப்பாக கடவுச்சொற்கள், கிரெடிட் கார்ட் எண்களை அளிக்க வேண்டாம்.
மிக முக்கியமாக உங்கள் எண்ணிற்கு பரிசு கிடைத்திருக்கிறது, லட்சக்கணக்கில் வென்றுள்ளீர்கள், வாழ்த்துக்கள் என கூறி மெசேஜ் வரும், இவர்கள் உங்கள் தகவல்களை வாங்கிவிட்டு ஏமாற்றவே செய்வார்கள், மிக கவனமாக இருக்க வேண்டும்.
முடிந்தளவு வாட்ஸ் அப் கணக்கை பாதுகாப்பாக வைக்க Two Factor Authentication செய்து வைக்கலாம், இது உங்களுக்கு கூடுதல் பாதுகாப்பை வழங்கும் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.