வாட்ஸ்அப் புரொஃபைல் பிக்சர் பார்க்க முடியலயா? புதிய அப்டேட்டைத் தெரிஞ்சுக்கோங்க!
வாட்ஸ் அப்பில் சிலரது Profile படத்தினை சில சமயங்களில் உங்களால் பார்க்க முடியாமல் போகலாம். இது ஏன் என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.
வாட்ஸ் அப்
குறிப்பிட்ட நபரின் புரொஃபைல் பிக்சர் யாரும் பார்க்க முடியாதபடி அமைக்கப்பட்டிருக்கலாம். அதாவது அந்த நபரின் புரொஃபைல் பிக்சர் நீங்கள் உட்பட அனைவரிடமிருந்தும் மறைக்கப்பட்டிருக்கலாம்.
உங்கள் மொபைல் எண் அவரது மொபைலில் சேமித்து வைக்கப்படவில்லை என்றாலும் புரொஃபைல் பிக்சரை பார்க்க முடியாது. அவர் தனது புரொஃபைல் பிக்சரை தான் சேமித்து வைத்துள்ள எண்களுக்கு மட்டும் தெரிவது போல வைத்திருக்கலாம்.
அந்த நபர் உங்கள் மொபைல் எண்ணை போனில் இருந்து நீக்கியிருக்கலாம். புரொஃபைல் பிக்சர் நீங்கள் முன்பு பார்க்க முடிந்தாலும், எண்ணை நீக்கிய பிறகு பார்க்க முடியாமல் போய்விடும்.
அந்த நபர் தனது புரொஃபைல் பிக்சர் நீங்கள் மட்டும் பார்க்க முடியாதபடி மறைத்து வைக்கப்பட்டிருக்கலாம். அதாவது, உங்கள் எண்ணை அவரது மொபைலில் இருந்து நீக்கவில்லை, ஆனால், புரொஃபைல் பிக்சரை மட்டும் பார்க்க அனுமதிக்கவில்லை. இல்லையெனில் உங்களது நம்பரை பிளாக் செய்து கூட வைத்திருக்கலாம்.
புரொஃபைல் பிக்சர் இல்லாமல் இருக்கலாம். அவர்களின் புரொஃபைல் பிக்சரை அவர்களே வேண்டாம் என்று நினைத்து அகற்றி இருக்கலாம். அதாவது செட்டிங்ஸில் எந்த நிபந்தனையும் இருக்காது. புரொஃபைல் பிக்சர் இல்லாமலே இருக்க அவர் விரும்பி இருக்கலாம்.
அவர் தனது வாட்ஸ்அப் கணக்கையே நீக்கியிருக்கலாம். வாட்ஸ்அப்பில் ஒருவரின் புரொஃபைல் படத்தை பார்க்க முடியவில்லை என்றால், அவர் தங்கள் கணக்கை முழுவதுமாக டீ-ஆக்டிவேட் செய்திருக்கலாம்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |