வாட்ஸ் அப்பில் ரூ. 255 Cashback சலுகை! உடனே கிடைக்க இப்படி மட்டும் செய்யுங்க
வாட்ஸ் அப் நிறுவனமானது சமீபத்தில் UPI அடிப்படையிலான கட்டணச் சேவையை அறிமுகப்படுத்தத் தொடங்கியுள்ளது. ஏற்கனவே இந்தியாவில், PhonePe, PayTM மற்றும் Google Pay போன்ற பல பேமெண்ட் நடைமுறையில் இருக்க, தற்போது அந்த வகையில், புதிய கேஷ்பேக் சலுகையை WhatsApp அறிவித்துள்ளது.
அந்த வகையில், ரூ. 51 மதிப்பிலான கேஷ்பேக் (cashback) நன்மையை வழங்க இருக்கிறது. அதிலும் மொத்தமாக ரூ. 255 மதிப்பில் கேஷ்பேக் நன்மையையும் வழங்கும். இந்த சேவையின் மூலம் ஒருவர் UPI வழிமுறைகளைப் பின்பற்றி பணத்தை மற்றவருக்குப் பரிமாற்றம் செய்யும் போது ரூ.51 கேஷ்பேக் கிடைக்கும் என்று நிறுவனம் கூறியுள்ளது.
UPI பேமெண்ட் ஆப்ஸ் இதுபோன்ற ஒரு விஷயத்தை மக்களுக்கு வழங்க முயல்வது இது முதல் முறை அல்ல... இதற்கு முன்னர் Google Pay செய்த அதே நடவடிக்கையை இப்போது வாட்ஸ்அப் செயல்படுத்துகிறது.
கூகுள் பே அறிமுகப்படுத்திய ஸ்கிராட்ச் கார்டு சலுகை இன்னும் இந்தியாவில் தொடர்கிறது. இதே வழியில் வாட்ஸ்அப் செயல்பட முயல்வதாகத் தெரிகிறது. மேலும், ஒரு கணக்கில் இருந்து இந்த கேஷ்பேக் நன்மையை ஐந்து முறை மட்டுமே ஒரு பயனர் பெற முடியுமாம்.
இன்னும் புரியும்படி சொல்லப்போனால், உங்கள் நண்பர்களுக்கு பணத்தை அனுப்பும் போது, ரூ. 1 முதல் ரூ. 5 வரை பணம் செலுத்தி, அதற்கு ரூ.51 கேஷ்பேக்(cashback) நன்மையைப் பெறலாம். பணம் வெற்றிகரமாகச் செலுத்தப்பட்டதும், ரூ. 51 மதிப்பிலான கேஷ்பேக் உடனடியாக உங்கள் கணக்கில் வரவு வைக்கப்படும்.
இதன்படி, நீங்கள் ஐந்து முறை பணப் பரிவர்த்தனை செய்யும் போது ஒரு பரிவர்த்தனைக்கு ரூ. 51 மதிப்பிலான கேஷ்பேக் நன்மை என்று ஒட்டுமொத்தமாக உங்களுக்கு ரூ. 255 கேஷ்பேக்(cashback) இப்போது கிடைக்கிறது. ஆனால் இந்த கேஷ்பேக் சலுகை எவ்வளவு காலம் நீடிக்கும் என்பது பற்றி தெரியவில்லை.
எப்படி UPI மூலம் பணம் அனுப்பலாம்
முதலில் UPI கட்டணம் செலுத்தி ரூ.51 கேஷ்பேக் பெற, உங்கள் சாதனத்தில் வாட்ஸ்அப் பயன்பாட்டை இயக்கவும்.
அதன் பின்னர், சாட் ஓபன் செய்து, 'Attachment icon' தேர்ந்தெடுக்கவும். இன்னும் சிலருக்கு Attachment icon ஐகான் அருகில் ரூபாய் ஐகான் காண்பிக்கப்படுகிறது.
அதை கிளிக் செய்யவும். இதன்பின்னர், உங்கள் ஆண்ட்ராய்டு சாதனத்தில் இருந்து கட்டண விருப்பத்தைத் தேர்ந்தெடுக்க உதவும். ஐபோன் பயனர்கள் சாட்பாக்ஸுக்கு அடுத்துள்ள ரூபாய் ஐகானை பயன்படுத்தலாம்.
பணத்தை அனுப்ப உங்கள் வங்கி விவரங்களை பதிவு செய்யவும். பின்னர் அனுப்பு விரும்பு தொகையை பயன்படுத்தி அனுப்பவும்.
கட்டணத்தை செலுத்த உங்கள் UPI பின் நம்பரை பதிவு செய்யவும். பண பரிவர்த்தனை முடிந்த பின் உங்களுக்கு உறுதிப்படுத்துதல் தகவல் அனுப்படும்.
இதன்பின்னர் வாட்ஸ் அப் கணக்கில் இருந்து பணத்த அனுப்பி 51 கேஷ்பேக்கை (cashback) உறுதிப்படுத்திக்கொள்ளலாம்.