இனி ஸ்டேட்டஸ் இப்படியும் வைக்கலாம்: புதிய அப்டேட்டை வழங்கிய வாட்ஸ் அப்
மெட்டா நிறுவனத்திற்கு சொந்தமான வாட்ஸ் அப் செயலியானது ஓர் புதிய அப்டேட் ஒன்றை பயனர்களுக்கு அறிமுகம் செய்துள்ளது.
வாட்ஸ் அப் ஸ்டேட்டஸ்
தற்போது வாட்ஸ் அப் செயலியை பயன்படுத்தாதவர்களே இருக்க முடியாது. அந்த அளவுக்கு வாட்ஸ் அப் செயலியானது மிகவும் முக்கியமானதாக இருக்கிறது.
வீடியோ, புகைப்படங்கள் பகிர்தல், சேட்டிங், குரூப் சேட்டிங், குரூப் கால், வீடியோ மற்றும் ஆடியோ கால் போன்ற அனைத்து வசதிகளும் அம்சங்களும் வாட்ஸ் அப்பில் உள்ளது.
அதில் வாட்ஸ் அப் ஸ்டேட்டஸ் என்பது தங்களில் எண்ணங்களையும், கருத்துக்களையும், காதல் பாடல்களையும் வீடியோ மற்றும் புகைப்படங்கள் அல்லது எழுத்துக்கள் மூலம் பகிர்ந்துக்கொள்வார்கள். இதன் வீடியோ அளவானது 30 விநாடிகள் வரை இருக்கும்.
புதிய அப்டேட்
இந்நிலையில் தற்போது வாட்ஸ் அப் புதிய அட்டேட் ஒன்றை வழங்கியிருக்கிறது.
வாட்ஸ்அப் கொண்டு வந்துள்ள புதிய அப்டேட்டில், பயனர்கள் தங்களது குரல் பதிவை 30 வினாடிகள் ஸ்டேட்டஸாக வைக்கலாம்.
இந்த தகவலை வாட்ஸ்அப் தனது அதிகாரப்பூர்வ டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது. அந்த டுவிட்டில் உங்கள் குரல்களை பதிவு செய்து ஸ்டேட்டஸில் பகிரலாம் என்று வாட்ஸ்அப் டுவீட் செய்துள்ளது.
மேலும் ஸ்டேட்டஸ் வைத்துள்ள பயனரின் சுயவிபர புகைப்படத்தை சுற்றி வளையம் தோன்றும்.
இதில் ஆண்ட்ராய்டுகளுக்கு பச்சை நிறத்திலும் ஐஓஎஸ் (iOS) களுக்கு நீல நிறத்திலும் அந்த வளையம் தோன்றும் என்றும் வாட்ஸ்அப் அறிவித்துள்ளது.
We've added some exciting ? updates to the status feature.
— WhatsApp (@WhatsApp) February 7, 2023
Tell it how it is, your way, with voice status. Now you can effortlessly record and share voice messages on your status. pic.twitter.com/MTdOjz4KlT