இனி இந்த கஷ்டம் இருக்காது.. Whatsapp-ல் புது அப்டேட்
பல மில்லியன் கணக்கான மக்கள் பயன்படுத்தும் Whatsapp பயனர்களுக்காக புது அப்டேட் ஒன்றை அறிமுகம் செய்துள்ளது.
மற்ற செயலிகளை விட Whatsapp-க்கான பயனர்கள் அதிகம் இருக்கிறார்கள். ஸ்மார்ட் போன்கள் பயன்படுத்தும் பயனர்கள் அனைவரும் Whatsapp செயலி வைத்திருக்கிறார்கள். முக்கியமான தகவல்களை கூட Whatsapp மூலமாக தான் பகிர்ந்து கொள்கிறார்கள்.
பயனர்களின் தேவைகளை தெரிந்து கொண்டு, அதன்படி Whatsapp செயலியை மெட்டா நிறுவனம் அப்டேட் செய்கிறது.
அந்த வகையில், Whatsapp தற்போது பயனர்களுக்காக புதிய அப்டேட் ஒன்றை அறிமுகம் செய்துள்ளது. இது தொடர்பாக பதிவில் தெளிவாக பார்க்கலாம்.
Whatsapp-ல் புது அப்டேட்
Whatsapp-ஐ பயன்படுத்தி தகவல்கள் பகிர்ந்து கொள்ளும் பொழுது நிகழ்நேரத்தில் மொழிபெயர்க்கும் புதிய வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த புதிய அம்சத்தை ஆண்ட்ராய்டு மற்றும் ஐஓஎஸ் போன்கள் பயன்படுத்துபவர்கள் உடனடியாக பயன்படுத்திக் கொள்ளலாம்.
தங்களுக்கு விருப்பமான மொழிகளில் தான் அனுப்பும் தகவலை மொழிப் பெயர்த்துக் கொள்ளலாம். இனி, உங்களுடைய சேட்களில் வரும் மெசேஜ்களை உடனுக்குடன் மொழிபெயர்க்கும் வசதி அப்டேட்டாக கொடுக்கப்பட்டுள்ளது.
இது ரியல்-டைம் சேட் டிரான்ஸ்லேஷன் (Real-Time Chat Translation) அம்சம் என அழைக்கப்படுகிறது. இந்த அம்சம் கணக்குகளுக்கு இன்னும் சில நாட்களில் கொடுக்கப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
Whatsapp பயனர்கள் இதற்காக எந்தவித செட்டிங்கையும் மாற்ற வேண்டிய தேவை இருக்காது.
என்னென்ன மொழிகள் உள்ளன?
முதல் கட்டமாக ஆங்கிலம், ஸ்பானிஷ், இந்தி, ரஷ்யன் உள்ளிட்ட மொழிகளில் மொழி பெயர்ப்பு செய்து கொள்ளலாம். அதிலும் குறிப்பாக ஐபோன் பயன்படுத்துபவர்கள் 19 மொழிகளில் தங்களின் தகவலை மொழி பெயர்ப்பு செய்துக் கொள்ளலாம்.
பயன்படுத்துவது எப்படி?
1. மொழிப்பெயர்ப்பு செய்ய வேண்டிய மெசேஜை நீண்ட நேரம் அழுத்தவும்.
2. “மொழிபெயர்ப்பு” (Translate) என்கிற விருப்பம் காட்டும்.
3. பயனர், அவருக்கு தேவையான மொழித்தொகுப்பை (Language Packs)பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
4. பதிவிறக்கம் செய்த பின்னர் திறந்து பார்த்தால் நீங்கள் விரும்பும் மொழியில் மெசேஜை பார்க்கலாம்.
விரைவில் இந்த அப்டேட்
Whatsapp புதிதாக அறிமுகப்படுத்தியிருக்கும் மொழிப் பெயர்ப்பு அம்சம் மெசேஜில் உள்ள தகவலை வாட்ஸ்அப்பால் அணுக முடியாது. இதனால், பயனர்களின் தனியுரிமைக்கு எந்தவித பிரச்சினையும் வராது.
அதே சமயம், தற்போது பயனர்கள் பயன்படுத்தி வரும் ‘மறைந்து போகும் சேட்கள்’ (Disappearing Chats) அம்சத்தில் 24 மணி, 7 நாட்கள் அல்லது 90 நாட்கள் ஆகிய மூன்று விருப்பங்களே உள்ளன. ஆனால் விரைவில் 1 மணி அல்லது 12 மணி நேரம் போன்று குறுகிய காலத்திற்கான வசதிகளும் கொடுக்கப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |
