வாட்ஸ் அப்பில் உங்களுக்கு நீங்களே செய்திகளை அனுப்புவது எப்படி?
மெட்டா நிறுவனத்திற்கு சொந்தமான வாட்ஸ் அப் செயலியானது அண்மையில் ஓர் புதிய அம்சத்தை பயனர்களுக்கு அறிமுகம் செய்துள்ளது.
தனக்கு தானே செய்திகளை அனுப்பி வைத்துக் கொள்ளும் புதிய தொழில்நுட்பம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
“Message Yourself” என இந்த வசதிக்கு பெயரிடப்பட்டுள்ளது. ஏனையவர்களுடன் தொடர்பாடுவதனைப் போன்றே பயனர்கள் தனக்கு தானே தொடர்பாடுவதற்காக இந்த வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
ஐபோன்கள் மற்றும் அன்ட்ரைட் போன்களில் இந்த வசதி காணப்படுகின்றது. இந்த வசதியான மிகவும் பயனுள்ளதாக அமையும் என எதிர்வுகூறப்பட்டுள்ளது.
வாட்ஸ்அப் பயன்படுத்தும் பயனர் தனக்கு தானே செய்திகளை அனுப்பிக் கொள்ளவும், குறிப்பு எடுத்துக் கொள்ளவும், நினைவூட்டல்களை அனுப்பி வைத்துக்கொள்ளவும் இந்த தொழில்நுட்பம் உதவுகின்றது.
வாட்ஸ்அப்பில் Message Yourself ஆப்ஷனை எவ்வாறு செயற்படுத்துவது?
1. வாட்ஸ்அப்பை ஓபன் செய்து கொள்ளவும்
2. நியூ சாட் ஒப்ஸனை அழுத்தவும்
3. கான்டக் லிஸ்ட்டில் பயனரின் பெயர் மேலே காணப்படும்
4. அதனை தெரிவு செய்து, செய்திகளை பரிமாறவும சாட் செய்யவும் முடியும்
Images: GadgetsNow