இனி யாரிடமும் 'STATUS அனுப்பு' என கேட்க வேணாம்: WhatsApp-ன் அசத்தல் அப்டேட்- ரீஷேர் செய்யலாமா?
நண்பர்களின் WhatsApp ஸ்டேட்டஸ்களை ரீஷேர் செய்து கொள்ளும் புதிய அம்சத்தை வெளியிடப் போவதாக சமூக வலைத்தளங்களில் தகவல் வெளியாகியுள்ளது.
புதிய அப்டேட்
WhatsApp, Telegram போன்ற தகவல் பரிமாற்று செயலிகள் தங்களின் புதிய அப்டேட்டுக்களை பயனர்களுக்கேற்ப வழங்கி வருகின்றன.
இதன்படி, பல புதிய அப்டேட்களில் கலக்கி வரும் WhatsApp, தங்களின் வாடிக்கையாளர்களை ஈர்க்கும் படி புதிய அம்சத்தை வழங்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அதாவது WhatsApp-ல் status வைக்கும் பழக்கம் நம்மில் பலருக்கு இருக்கின்றது. அதில் நமது நண்பர்கள் நமக்கு பிடித்த status போட்டு விட்டால் அதனை அவர்களிடம் ரீ- ஷேர் செய்யும் படி கேட்டிருப்போம்.
சிலர் மெசேஜை பார்த்து விட்டு ரீ- ஷேர் செய்வார்கள். இன்னும் சிலர் எவ்வளவு கேட்டாலும் அனுப்பமாட்டார்கள். இந்த பிரச்சினைக்கு மெட்டா நிறுவனம் தீர்வு வழங்குவுள்ளது.
அந்த வகையில் பிடித்தமானவர்களின் Status ரீஷேர் செய்து கொள்ளவும், பிடித்தவர்களை மென்ஷன் செய்து Status வைக்கவும் புதிய அப்டேட்டை அறிமுகப்படுத்தியுள்ளது.
பயனர்களின் விருப்பங்களை தொடர்ந்து செய்து வரும் மெட்டா நிறுவனம், ஸ்டிக்கர்களை க்ரியேட் மற்றும் எடிட் செய்யக்கூடிய அப்டேட், வாய்ஸ்நோட் அப்டேட், தனித்தனி டேப்கள் முதலிய பல்வேறு புதிய அம்சங்களை அறிமுகப்படுத்தி வருகின்றது.
அம்சத்தின் சிறப்பு
status வைக்கும் பொழுது ஏற்படும் சிறுசிறு பிரச்சினைகளுக்கு இனி தீர்வு கிடைத்துள்ளது. உறவில் இருக்கும் ஜோடிகளுக்கு இது போன்று status பிரச்சினை அடிக்கடி வரும்.
இப்படியான பிரச்சினைகளுக்கு இந்த அப்டேட் உதவியாக இருக்கும். ஒருவரை mention செய்து status வைக்கும் போது அந்த ஸ்டேட்டஸை ரீஷேர் செய்ய முடியும்.
WABetaInfo-ன் அறிக்கையின் படி, “status அப்டேட் செய்யும் போது புதிய பட்டன் ஒன்று வாடிக்கையாளர்களுக்கு காண்பிக்கப்படும். அதைப்பயன்படுத்தி யாருக்கு ஸ்டேட்டஸை mention செய்யலாம் என்ற டேப் மூலம், விருப்பமான நபருக்கு மென்சன் செய்து ஸ்டேட்டஸ் வைத்துக்கொள்ளலாம்.
அதை mention செய்த நபர் தங்களுடைய ஸ்டேட்டஸ்ஸில் ரீஷேர் செய்துகொள்ளலாம்” என்று உள்ளது. இந்த புதிய அப்பேட் வாடிக்கையாளர்களை கவரச் செய்யும் என மெட்டா நிறுவனம் நம்புகிறது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |