வாட்ஸ்அப்பில் வரப்போகும் புது அப்டேட்! கொள்கையை மீறினால் சாட் செய்ய முடியாது
Whatsapp கொள்கைகளை மீறுபவர்கள் சே் செய்ய முடியாத வகையில் புதிய அப்டேட் ஒன்றினை குறித்த நிறுவனம் கொண்டு வந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
வாட்ஸ் அப்
உலகம் முழுவதும் கோடிக்கணக்கான பயனர்கள் பாவித்து வரும் வாட்ஸ் அப் செயலி, விரைவான தகவல் பரிமாற்றத்திற்கு அதிகமாகவே உதவி செய்கின்றது.
வாட்ஸ் அப்பை பாவிக்கும் பயனர்களுக்கு அவ்வப்போது பல்வேறு புதிய அப்டேட்களை குறித்த நிறுவனம் வெளியிட்டு வருகின்றது.
அந்த வகையில் புதிய ஒரு அம்சத்தை வெளியிடுவதாக தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி இந்த புதிய கட்டுப்பாட்டு அம்சம் சமீபத்திய ஆண்ட்ராய்டு பீட்டா பதிப்பில் காணப்பட்டது.
புதிய கட்டுப்பாடு என்ன?
இந்த புதிய அம்சம் எதிர்கால புதுப்பிப்பில் வெளியிடப்படும் என்றும் குறிப்பிட்ட WhatsApp கொள்கைகளை மீறினால் பயனர்களுடன் chat செய்வதை தற்காலிகமாக தடுக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளது.
அதாவது குறிப்பிட்ட WhatsApp கொள்கைகளை மீறும் பயனர்களுக்கு தற்காலிகத் தடையை விதிக்கப்படும். அப்போது குறிப்பிட்ட காலத்திற்கு பயனர்கள் புதிய chat-ஐ தொடங்க முடியாது.
இருப்பினும், தற்போதுள்ள chat மற்றும் குழுக்களுக்குள் செய்திகளைப் பெறுவதற்கும் பதிலளிப்பதற்கும் பயனர்களுக்கு எந்த தடையும் இருக்காது.
அதாவது மோசடி, மொத்தமாக செய்தி அனுப்புதல், பல்வேறு வகையான துஷ்பிரயோகங்களைக் கண்டறிய வாட்ஸ்அப் தானியங்கு கருவிகளைப் பயன்படுத்துகிறது.
நிரந்தரத் தடைகள் மீதான தற்காலிகக் கட்டுப்பாடுகளைத் தேர்ந்தெடுப்பதன் மூலம், பயனர்கள் தங்கள் தரவுகளுக்கான அணுகலை முழுவதுமாக இழக்காமல், அவர்களின் நடத்தையைச் சரிசெய்வதற்கான வாய்ப்பை வாட்ஸ் ஆப் வழங்கும்.
கணக்குக் கட்டுப்பாடு அம்சம் தற்போது உருவாக்கத்தில் உள்ளது. இது செயலியின் எதிர்கால புதுப்பிப்பில் சேர்க்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |