நிராகரிக்கப்பட்ட இடத்தில் WhatsApp.. இதன் பின்னணி கதை உங்களுக்கு தெரியுமா?
Jan Koum உக்ரைனில் மிக ஏழையான குடும்பத்தில் பிறந்து வளர்ந்தவர்.
இவர், சிறுவயதிலேயே அமெரிக்காவுக்கு குடிபெயர்ந்த போது அவருக்கும் தாயாருக்கு அரசு உதவித் திட்டங்கள் மற்றும் விலை குறைந்த உணவுகள் வாங்கி சாப்பிட வேண்டிய நிலை ஏற்பட்டது.
இணையம், கணினி, முகநூல் என தொழிநுட்பம் வளர்ந்து வரும் பொழுது Jan Koum படித்துக் கொண்டிருந்தார்.
அதன் பின்னர், தன்னிச்சையாக தொழிநுட்பக்கல்வியை கற்றுக் கொண்டு Yahoo-வில் பணியாளராக சேர்ந்துள்ளார். அங்கு Brian Acton என்பவருடன் நட்பு ஏற்பட்டு, பின்னாளில் இருவரும் இணைந்து தான் WhatsApp என்ற செயலியை உருவாக்கினார்கள்.
கடந்த 2014 ஆம் ஆண்டு Facebook-ஐ வேலைக்கு எடுக்க மறுத்த அந்த நிறுவனமே, Jan Koum உருவாக்கிய WhatsApp-ஐ $19 Billion USD கொடுத்து வாங்கியது. இந்த ஒப்பந்தம் அன்று வரை Facebook-ன் மிகப்பெரிய கொடுக்கல் வாங்கலாக பார்க்கப்படுகிறது.
அந்த வகையில், WhatsApp-ஐ கண்டுபிடிக்க என்ன காரணம்? அவரின் வாழ்க்கையில் அப்படி என்ன நடந்தது? என்பதனை காணொளியில் பார்க்கலாம்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |