இனி மெசேஜிற்கு ஈஸியா React செய்யலாமாம்.. WhatsApp கொடுத்துள்ள புது அப்டேட்
உலகம் முழுவதும் Whatsapp பயன்படுத்தும் பயனர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன.
அதே சமயம் பயனர்கள் எதிர்பார்க்கும் அம்சங்களை Meta நிறுவனம்அடிக்கடி அப்டேட் செய்து வருகின்றது.
Whatsapp- ல் நாம் நினைக்கும் நபருடன் ஆடியோ கால், வீடியோ கால், புகைப்படங்கள் அனுப்புவது, செய்தி அனுப்புவது என அனைத்தும் செய்யலாம்.
இந்த நிலையில் Whatsapp-ல் பயனர்களுக்காக புதிய அம்சமொன்று நடைமுறைக்கு வந்துள்ளது இது தொடர்பாக தொடர்ந்து பதிவில் பார்க்கலாம்.
Double tap reaction
Instagram-ல் டிஎம் அம்சத்தைப் போல Whatsapp விரைவில் புதிய அம்சத்தை வெளியிட உள்ளது.
அதாவது Whatsapp புதிய Double tap reaction அம்சத்தை அறிமுகப்படுத்தவுள்ளது.
இந்த அம்சத்தின் மூலம் பயனர்கள் ஒரு செய்தியை இரு முறை தட்டுவதன் மூலம் பதிலளிக்க முடியும்.
Double tap அம்சத்தின் மூலம் நேரத்தை மிச்சப்படுத்தும். அத்துடன் பயனர்களுக்கிடையிலான தொடர்பை மேம்படுத்தும்.
எப்படி பயன்படுத்தலாம்?
Whatsapp சேட்டில் அனுப்பப்படும் செய்திகளை Double tap செய்வதன் மூலம், தானாகவே ஹார்ட் எமோஜியை காட்டும். இருப்பினும் ஹார்ட் எமோஜியை தவிர்த்து வேறு எமோஜி வேண்டும் என்றால் பழைய முறையை பின்பற்றலாம்.
Double tap reaction அம்சமானது நேரடியாக ஆண்ட்ராய்ட் போன்கள் பயன்படுத்துபவர்கள் பயன்படுத்தலாம்.
மாறாக இந்த புதிய அம்சம் எப்போது வெளிவரும் என்பதை நிறுவனம் இன்னும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |