வாட்ஸ் அப் பயனர்களுக்காக வெளியான புதிய அம்சம்
இன்று உலகம் முழுவதும் செயல்பட்டு வரும் வாட்ஸ்அப் செயலியில், பல மாற்றங்கள் அவ்வப்போது வந்து கொண்டிருக்கின்றது. அதில் ஒன்று ஒரு போனில் இருந்து மற்றொரு போனுக்கு சாட்டை மாற்றுவது.
நாம் செய்யும் வாட்ஸ்அப் சாட் அனைத்துமே கூகுல் டிரைவில் பேக்அப் செய்யப்பட்டு சேமதிக்கப்படும் நிலையில், இதனை மற்ற போன்களுக்கு மாற்றுவதற்கு என்ன செய்யலாம் என்பது தற்போது தெரிந்து கொள்வோம்.
இந்த மாற்றம் செய்வதற்கு நமது வாட்ஸ்அப் கணக்குடன் இணைக்கப்பட்ட கூகுள் டிரைவ் கணக்கினை இணைக்க வேண்டுமாம். ஆனால் இவை அதிகமான நேரம் எடுத்துக்கொள்ளும் என்பதால் தற்போது புதிய வழி ஒன்றினை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
QR ஸ்கேன் Chat Transfer
QR ஸ்கேன் முறையின் படி, ஸ்கேன் செய்து நமது வாட்ஸ்அப் சாட் முழுவதையும் வேறொரு போனிற்கு மாற்றம் செய்வதற்கு புதிய QR கோடு சாட் டிரான்ஸ்பர் அம்சம் இருக்கின்றது.
இந்த அம்சம் வாட்ஸ்அப் பயனர்களுக்கு வெகு விரைவில் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. இவை அதிக நேரம் எடுத்துக்கொள்ளாமல் மிக விரைவில் கூகுள் டிரைவ் பேக்அப் மூலம் அனைத்து சாட்களையும் மாற்றிக் கொள்ள முடியும்.
இந்த புதிய அம்சம் ஒரே OS தளத்தில் இயங்கும் ஸ்மார்ட்போன்களில் சிறப்பாக செயல்படும் என்று மெட்டா (Meta) அறிவித்துள்ளது.
வாட்ஸ்அப், ஏற்கனவே iOS மற்றும் ஆண்ட்ராய்டு (Android) ஸ்மார்ட்போன்களுக்கு இடையிலான சாட் மாற்றம் அம்சத்தை வழங்குகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
வாட்ஸ்அப் நிறுவனம் தற்போது, இதேபோன்ற அம்சத்தை ஒரே தளத்தில் இயங்கும் ஸ்மார்ட்போன்களில் அறிமுகம் செய்ய தயாராகிறது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள். JOIN NOW |