இந்த மாதங்களில் பிறந்தவர்ளுக்கு இந்த ஆரோக்கிய பிரச்சினைகள் இருக்குமாம்... நீங்க எந்த மாதம்?
ஜோதிட மற்றும் எண்கணித சாஸ்திரங்களின் பிரகாரம் ஒருவர் பிறப்பெடுக்கும் மாதத்துக்கும் அவர்களின் எதிர்கால வாழ்க்கை மற்றும் விசேட குணங்களுக்கும் இடையில் நெருங்கிய தொடர்பு காணப்படுவதாக நம்பப்படுகின்றது.
அந்த வகையில் 12 மாதங்களில் எந்த மாதத்தில் பிறந்தவர்கள் எந்த வகையான ஆரோக்கிய பிரச்சினைக்கு முகங்கொடுக்க நேரிடும் என்பது தொடர்பில் இந்த பதிவில் பார்க்கலாம்.
பிறப்பு மாதங்களும் ஆரோக்கியமும்
ஜனவரி- ஜனவரி மாதத்தில் பிறந்தவர்கள் இதயம் மற்றும் இரத்த நாளங்கள் தொடர்பான பிரச்சினைகளை சந்திக்க வேண்டி ஏற்படலாம். மற்றவர்களை ஒப்பிடுகையில் இருவர்களுக்கு இதயம் சம்பந்தமான நோய்கள் விரைவில் ஏற்படுகிள்றது. இவர்கள் அதிகம் உணச்சிவசப்படுவதால், உயர் ரத்த அழுத்த பிரச்சினைகளும் ஏற்படும் வாய்ப்பு அதிகம்.
பிப்ரவரி- பிப்ரவரி மாதத்தில் பிறந்தவர்களும் இதய நோய்கள் மற்றும் நுரையீரல் சம்பந்தமான பிரச்சினைகள் ஏற்படும் வாய்ப்புகள் அதிகம். எனவே நுரையீரலை பாதிக்கும் கெட்ட பழக்கங்கள் கொண்டவர்கள் அதனை கைவிட வேண்டியது அவசியம்.
மார்ச் -மார்ச் மாதத்தில் பிறந்தவர்களுக்கு இரத்த நாளங்கள் சம்பந்தமான பிரச்சினைகள் ஏற்படும் வாய்ப்பு அதிகம் காணப்படுகின்றது. முக்கியமாக பெருந்தமனி தடிப்பு நோய் அபாயம் இவர்களுக்கு ஏற்படும் வாய்ப்புகள் அதிகமாம்.
ஏப்ரல்- ஏப்ரல் மாதத்தில் பிறந்தவர்களுக்கும் இதய நோய்கள் ஆபத்துகள் அதிகம். இவர்களுக்க அடிக்கடி மார்பு வலியும் ஏற்பம கூடும். அவர்கள் மன அழுத்த பாதிப்பில் இருந்து தங்களை பாதுக்காத்து கொள்ள வேண்டியது அவசியம்.
மே-மே மாதத்தில் பிறந்தவர்கள் ஆரோக்கிய விடத்தில் மிகவும் அதிர்ஷ்டசாலிகள். இவர்களுக்கு இயகையாகவே அதிக நோய் எதிர்ப்பு சக்தி காணப்படும்.இவர்கள் ஆரோக்கியமான வாழ்க்கை முறையை பின்பற்றினால் நோய்கள் ஏற்படும் வாய்ப்புகள் மிகவும் அரிது. பெண்ணாக இருந்தால் கருவுறுதல் பிரச்சனைகளை ஏற்படலாம்.
ஜூன் - ஜூன் மாதத்தில் பிறந்தவர்கள் நுரையீரல், இதயம் தொடர்பான நோய்களால் அவதிபடும் அபாயம் காணப்படுகின்றது. இவர்கள் மனநிலை குறித்து அதிக அக்கறை செலுத்த வேண்டியது அவசியம். இந்த மாதத்தில் பிறந்த பெண்களின் இனப்பெருக்க மண்டலம் ஆரோக்கியதமாக இருக்கும்.
ஜூலை- ஜூலை மாதத்தில் பிறந்தவர்களும் ஆரோக்கிய விடயத்தில் சற்று அதிர்ஷ்டசாலிகளாக இருக்பார்கள். இவர்கள் எந்த பெரிய ஆரோக்கிய பிரச்சினைகளிலும் சிக்கிக்கொள்ள மாட்டார்கள். இவர்கள் முறையாக உணவுப்பழக்கத்தை கடைப்பிடிப்பதால் வாழ்நாள் முழுவதும் ஆரோக்கியமாக இருக்கலாம்.
ஆகஸ்ட்- ஆக்ஸ்ட் மாதத்தில் பிறந்தவர்கள் ஆரோக்கியம் குறித்த அதிகம் கவலைபட தேவையில்லை. இவர்கள் உடல் ரீதியாகவும் மன ரீதியாகவும் சிறந்த வலிமையை கொண்டிருப்பார்கள்.
செப்டம்பர்- செப்டம்பர் மாதத்தில் பிறந்தவர்கள் சுவாசம் மற்றும் இனப்பெருக்கம் சம்பந்தப்பட்ட பிறச்சினைகளை சந்திக்க வேண்டி ஏற்படலாம். இவர்களுக்கு ஆஸ்துமா பிரச்சனை ஏற்படவும் வாய்ப்பு காணப்படுனகின்றது.
அக்டோபர் -அக்டோபர் மாதத்தில் பிறந்தவர்கள் நிறைய ஆரோக்கிய பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். அவர்கள் ஆரோக்கியம் தொடர்பில் அதிக அக்கறை செலுத்த வேண்டும். இவர்களுக்கு கவனம் செலுத்துவது தொடர்பான நோய்கள் ஏற்படும் அபாயம் அதிகம் இருக்கும்.
நவம்பர் -நவம்பர் மாதத்தில் பிறந்தவர்கள் அடிக்கடி நுரையீரலுடன் தொடர்பான நோய்களால் அவதிப்படுவார்கள். இவர்கள் சளியை ஏற்படுத்தும் உணவுகளை தவிர்த்துக்கொள்ள வேண்டியது அவசியம்.
டிசம்பர்- டிசம்பர் மாதத்தில் பிறந்தவர்கள் இனப்பெருக்கம் மற்றும் சுவாசம் தொடர்பான நோய்களுக்கு ஆளாக நேரிடலாம். இது குறித்து இவர்கள் அதிகம் கவனம் செலுத்த வேண்டும்.
இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (மனிதன் தளம் இதற்கு பொறுப்பேற்காது).
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |