தொடர்ச்சியாக பயன்படுத்தினால் ஏசி வெடிக்குமா? இந்த தவறுகளை செய்யாதீர்கள்...
பொதுவாகவே, கோடை காலத்தில் ஏசியை பயன்படுத்துவோரின் எண்ணிக்கை வழக்கத்தை விட அதிகமாகவே இருக்கும்.
இவ்வாறு தொடர்ச்சியாக ஏசியை பயன்படுத்தும் பட்சத்தில் ஒரு சில இடங்களில் அது வெடித்து பெரும் தீவிபத்து ஏற்படுகிறது.
இவ்வாறு ஏசி வெடிப்பதற்கு என்ன காரணம் என்பது குறித்தும், இதனை எவ்வாறு தவிர்க்கலாம் எனவும் இந்த பதிவில் பார்க்கலாம்.
ஏசியை எப்படி பயன்படுத்த வேண்டும்?
வீட்டை எப்போதும் குளிர்ச்சியாக வைத்துக்கொள்ள வேண்டும் என்பதற்காகத்தான் ஏசியை பயன்படுத்துகின்றோம். ஆனால் ஏசியின் அவுட்டோர் யூனிட் சரியாக வெப்பநிலையில் இருக்கின்றதா என்பது குறித்து பலரும் கவனம் செலுத்துவது கிடையாது.
ஏசியின் அவுட்டோர் யூனிட் அதிகமாக வெப்பமடையும் போது அந்த அழுத்தம் காரணமாக ஏசி வெடிக்கும் நிலை ஏற்படும். எனவே, உங்கள் ஏசியின் அவுட்டோர் யூனிட் சூரிய ஒளி அதிகம் படாத இடத்தில் வைக்ப்பட்ருக்கின்றதா என்பதை உறுதிசெய்துக்கொள்ள வேண்டும்.
ஏசி அவுட்டோர் யூனிட்டில் இருக்கும் கம்ப்ரசரால் அதிக வெப்பத்தை தாங்க முடியாது.சூரிய ஒளி அதிகமாக படும் இடத்தில் தான் ஏசி அவுட்டோர் யூனிட்டை வைக்க வேண்டும் என்ற நிலை இருந்தால் இதற்கு நிழல் கொடுக்கும் வகையில் ஏதாவது மாற்றீடு செய்துவிட வேண்டும்.
அது மாத்தரமன்றி பெரும்பாலானவர்கள், இரவு முழுவதும் ஏசியை இயங்கவிடுகின்றனர். அவ்வாறு இயக்குவதும் ஏசி தீப்பற்றும் அபாயத்தை அதிகரிக்கின்றது.
அந்த அபாயத்தை தவிர்ப்பதற்கு டைமர் பயன்படுத்தி, குறிப்பிட்ட நேரம் வரை மட்டும் ஏசி இயங்கும் வகையில் பயன்படுத்தலாம். டைமர் பயன்படுத்துவதன் மூலம் மின்சார கட்டணம் குறைவடைவதுடன் ஏசி வெடிக்கும் அபாயத்தையும் தவிர்க்க முடியும்.
இதனால், ஏசிக்கும் கொஞ்சம் ஓய்வு கிடைப்பதால் ஏசியின் பாவனை காலத்தை அதிகரிக முடியும்.
ஏசியை தொடர்ந்து பயன்படுத்திக்கொண்டே இருப்பவர்கள், ஒவ்வொரு 600 மணி நேர பாவனைக்கு பின்னரும் ஏசியை சர்வீஸ் செய்ய வேண்டியது இன்றியமையாதது.
மேலும் ஏசி சரியான முறையில் குளிர்ச்சியடையவில்லை என்றாலும் வேறு ஏதேனும் பிரச்சனை இருந்தாலும், அதை உடனடியாக சரிசெய்வதால் ஏசியை நீண்ட நாட்கள் பயன்படுத்த முடிவதுடன் ஏசி வெடிப்பதற்கான அபாயத்தையும் குறைத்துக்கொள்ள முடியும்.
குளிர்ச்சியடையாமல் ஏசி தொடர்ந்து இயங்கிக் கொண்டிருந்தால், மெஷினில் அழுத்தம் ஏற்பட்டு, ஏசி வெடிக்கும் வாய்ப்பு காணப்படுகின்றது. ஏசி நீண்ட நேரம் வேலை செய்தும் அறை குளிர்ச்சியடையவில்லை என்றால் உடனடியாக கவனம் செலுத்த வேண்டும்.
ஏசி ரிமோட்டில் காணப்படும் டர்போ (Turbo Mode) என்ற mode அறையை விரைவாக குளிர்ச்சியடைய வைக்க பயன்படுகின்றது.
இதனை எப்போதாவது ஒருமுறை பயன்படுத்தினால் பிரச்சினை ஏற்படாது. தொடர்ந்து இதே mode பயன்படுத்தப்பட்டால் மெஷினில் அதிக அழுத்தம் ஏற்பட்டு, வெடிக்கும் அபாயம் அதிகரிக்கின்றது.
இவற்றை தவிர்த்துக்கொண்டால் ஏசி வெடிக்கும் அபாயம் குறைவடைவதுடன் ஏசியின் ஆயுட்காலமும் அதிகரிக்கின்றது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |