காலாவதியான மாத்திரைகளை உட்கொண்டால் உயிருக்கே ஆபத்தா? மருத்துவர் விளக்கம்
பொதுவாகவே நாம் பயன்படுத்தும் பெரும்பாலான பெருட்களுக்கு காலாதி திகதி உண்டு என்பது அனைவரும் அறிந்தது தான்.
குறிப்பாக உணவு பொருட்கள், மருந்து பொருட்கள், அழகுசாதன பொட்ககள் ஆகியவற்றை பயன்படுத்துகம் போது காலாவதி திகதி குறித்து அதிக கவனம் எடுத்துக்கொள்ள வேண்டும் என மருத்துவ நிபுணர்கள் பரிந்துரைக்கின்றனர்.

அந்தவகையில், ஒருவேளை தவறுதலாக காலாவதியான மாத்திரையை உட்க்கொண்டு விட்டால் உயிருக்கே ஆபத்தா? என்ற சந்தேகம் பலருக்கும் இருக்கும்.
இது குறித்து மருத்துவ நிபுணர் அருண்குமார் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் விளக்கம் கொடுத்துள்ளார். இது தொடர்பிலான முழுமையான விளக்கத்தை இந்த பதிவில் பார்க்கலாம்.

மருத்துவ விளக்கம்
காலாவதியான மாத்திரைகளை உட்கொள்வதால் என்னென்ன பாதிப்புகள் ஏற்படும் என்பது குறித்து மருத்துவர் அருண்குமார் குறிப்பிடுகையில், ஒரு உணவு பொருள் காலாவதி ஆகிவிட்டது என்றால், அதில் நோய்களை ஏற்படுத்தக்கூடிய கிருமிகள் வளர்ச்சியடைவதற்கான வாய்ப்பு அதிகம்.
அதனால் காலாவதியான உணவுகளை உட்கொண்டால், வாந்தி, வயிற்றுபோக்கு, வயிற்று வலி, அல்லது ஒவ்வாமை போன்ற பக்க விளைவுகள் ஏற்படக்கூடும்.

ஆனால் உணவு பொருட்கள் காலாவதி ஆவதும் மாத்திரைகள் காலாவதியாவது ஒன்றல்ல. இவை இரண்டும் முற்றிலும் வேறுப்பட்டது.
மாத்திரைகள் காலாவதி ஆகின்றது என்றால். அது பழுதடைந்துவிட்டது என்று அர்த்தம் கிடையாது. மாறாக அதன் வீரியம் குறைகின்றது என்று அர்த்தம்.
அதாவது ஒரு நோய் கிருமிக்கு எதிராக அது செயலாற்றும் வேகம், செயல்திறன் குறைவடைகின்றது என்பதே பொருள்.

எனவே காலாவதியான மாத்திரையை தவறுதலாக உட்கொண்டுவிட்டீர்கள் என்றால், அதற்காக உயிரே போய் விடும் என்ற அளவுக்கு அச்சப்பட தேவையில்லை.
காலாவதியான மருத்துக்களை முறையாக அப்புறப்படுத்திவிட்டு, புதிய மருந்துக்களை மருத்து ஆலோசனையுடன் மீண்டும் வாங்கி பயன்படுத்தலாம் என குறிப்பிட்டுள்ளார்.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |