குடல் ஆரோக்கியமாக இருக்க வேண்டுமா? அப்போ தொடர்ந்து இந்த தவறுகளை செய்யாதீர்கள்
நம் மொத்த உடல் ஆரோக்கியத்திற்கும் குடல் நலம் மிக அவசியமாகும். குடலானது இரையகக் குடற்பாதையின் ஒரு பகுதியாகும். இது இரப்பையின் பக்கத்தில் அமைந்துள்ளது.
குடலானது இருவகைப்படும் ஒன்று சிறுகுடல் மற்றொன்று பெருங்குடல். உணவை செரிமானமடைய செய்தல், ஊட்டச்சத்துக்களை உடல் உறிஞ்சுதல், நோய் எதிர்ப்பு சக்தியை சிறப்பாக செயற்படுத்துதல் போன்றவற்றிற்கு குடல் ஆரோக்கியம் முக்கியமானதாக இருக்கிறது.
இப்படி பல கோணங்களில் தொழிற்படும் குடலை ஆரோக்கியமாக பாதுகாப்பது மிக மிக முக்கியமானதாகும். ஆனால் நாம் செய்யும் தவறுகள் நம் குடலை பாதிக்கிறது அது என்னென்ன என்பது பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்.
குடல் ஆரோக்கியத்திற்கு
குடல் ஆரோக்கியமாக இருக்க வேண்டும் என்றால் மோசமான உணவுப் பழக்கத்தை தவிர்க்க வேண்டும். அதாவது செறிவூட்டப்பட்ட உணவுகள், சக்கரை அதிகம் நிறைந்த உணவு, ஆரோக்கியமற்ற உணவுப் பழக்கத்தை கடைப்பிடித்தால் குடல் நலன் பாதிக்கப்படும்.
குடலை ஆரோக்கியமாக பாதுகாப்பதற்கு நார்ச்சத்து மிக முக்கிய சத்தாகும். அதனால் நார்ச்சத்து அதிகம் எடுத்துக் கொள்வது குடல் ஆரோக்கியத்தை பாதுகாக்கும்.
தினமும் அதிகளவு தண்ணீர் எடுத்துக் கொள்வது உடலுக்கு மிக ஆரோக்கியமானது ஆனால் தண்ணீர் அதிகம் அருந்தாத காரணத்தால் நீர்ச்சத்து குறைபாடு ஏற்பட்டு குடல் பாதிக்கப்படும்.
நீங்கள் எப்போதும் கவலையாகவும் மன அழுத்தமாகவும் இருப்பதால் உங்கள் குடலும் பாதிக்கப்படும்.
அளவுக்கு அதிகமாக மது அருந்தினால் வயிற்றின் சுவர்களில் பாதிப்பு ஏற்பட்டு குடல் பாதிக்கப்படும்
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள். JOIN NOW |