சிரிப்பால் மட்டுமே மக்களை கவர்ந்த காமெடி நடிகர் குமரிமுத்து...கல்லறையில் இப்படியா எழுதியிருக்கு?
பிரபல நகைச்சுவை நடிகர் குமரிமுத்துவின் கல்லறையில் பொறிக்கப்பட்டுள்ள வாசகம் தற்போது இணையத்தில் வைரலாகி பெரும்பாலானவர்களின் கவனத்தையும் ஈர்த்து கவுகின்றது.
நடிகர் குமரிமுத்து
குமரிமுத்து என்றாலே நமது நினைவுக்கு வருவது அவரது சிரிப்புதான். தனது சிரிப்பால் மட்டுமே மக்களை சிரிக்கவைப்பது அவரது தனித்துவமான திறமை.
14 வயதில் சொந்த ஊரான கன்னியாகுமாரியை விட்டு சென்னைக்கு வந்து மேடை நாடகங்களில் நடித்த குமரிமுத்து பல போராட்டங்களை கடந்து ,வெள்ளித்திரையில் நடிக்க ஆரம்பித்தார்.
தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் என நான்கு மொழிகளிலும் சுமார் 1000க்கும் மேற்பட்ட படங்களில் நடித்தவர் இவர்.
மாறுகண்களுடன் மிகவும் சாதாரணமான தோற்றத்தை கொண்ட குமரிமுத்து, சினிமாவில் பல இன்னல்களை தாண்டி சாதித்து காட்டியவர்.
முதன் முதலாக நடிகர் சங்கத்தின் நிர்வாகத்தின் மீது கடுமையாக விமர்சனம் செய்தவர் இவர்தான். அதன் விளைவாக சங்கத்தில் நிரந்தர உறுப்பினர் பதவியிலிருந்து விளக்கப்பட்டார்.
குமரிமுத்துவின் இறுதி காலம்
இவரின் கடைசி காலத்தில் மாரடைப்பு ஏற்பட்டு, அவரை மருத்துவமனையில் சேர்த்திருந்தார்களாம். அப்போது மருத்துவர்கள் பரிசோதனை செய்து பார்த்ததில் அவருக்கு நுரையீரலில் பிரச்சனை இருக்கிறது என்று சொல்லி இருக்கிறார்கள்.
ஆனால் அப்போது தான் ஊழியம் செய்யப் போக வேண்டும் என்று குமரி முத்து உறுதியாக இருந்திருக்கிறார். மருத்துவர்கள் எவ்வளவு சொல்லியும் கேட்காமல், எப்படியும் இறக்க தான் போகிறோம். ஆனால் அதை நமக்கு பிடிச்ச மாதிரி ஊழியம் செய்துவிட்டு இறந்துவிடலாம் என்று கூறி இவர் ஊழியம் செய்ய போயிருக்கிறார்.
அதற்கு பிறகு தான் இரண்டு நாளில் அவர் இறந்து போனார் என்று அவருடைய மகள் குறிப்பிட்டுள்ளார்.
2016 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் உயிரிழந்த நடிகர் குமரிமுத்துவின் கல்லறை வாசகம் பலரின் கனவத்தையும் ஈர்த்தது.
பொதுவாக ஒருவர் இறந்துவிட்டால் அவரது கல்லறையில் பிறந்த தேதி, இறந்த தேதி குறிப்பிடுவார்கள். அல்லது சிலர் எதேனும் வாசகத்தை எழுதுவார்கள்.
அந்தவகையில் நடிகர் குமரிமுத்துவின் கல்லறை வாசகத்தில் " “It is the time for the God ...to enjoy his laughter” (எங்களை தேவையான அளவு சிரிக்க வைச்சுட்டாரு.. ஆண்டவரே இது உங்க டைம் எஞ்சாய் பண்ணுங்க), இவரின் சிரிப்பை கடவுள் எஞ்சாய் செய்ய வேண்டிய நேரம் என்று பொறிக்கப்பட்டிருக்கிறது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |