தீபாவளிக்கு நடிகை த்ரிஷா செய்த விஷயம்... ரசிகர்களுக்கு வைத்த கோரிக்கை
நடிகை த்ரிஷா தான் தீபாவளிக்கு செய்யப்போகும் விடயத்தினை குறித்து இன்ஸ்டாவில் பதிவு வெளியிட்டுள்ளார்.
நடிகை த்ரிஷா
நடிகை த்ரிஷா குறித்து வெளியாகும் ஒவ்வொரு விடயத்தினையும் ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருக்கின்றனர்.
சமீபத்தில் கூட முதல்வர் விஜய்யுடன் இளம்சிவப்பு புடவையணிந்து திருமண வரவேற்பு விழா ஒன்றிற்கு சென்றது ரசிகர்களை வாயடைக்க வைத்ததுடன், அவர் அணிந்திருந்த புடவை குறித்து பல கேள்விகளும் எழுந்திருந்தது.
தொடர்ந்து அவர் வெளியே செல்வதையும், யாருடன் என்ன செய்கின்றார் என்பதை அதிகமாக ரசிகர்கள் உற்று நோக்கிக் கொண்டிருக்கும் நிலையில், தற்போது த்ரிஷா நாய்களை பாதுகாப்பது குறித்து பதிவு ஒன்றினை வெளியிட்டுள்ளார்.

அதாவது இன்று உலகம் எங்கும் தீபாவளி பண்டிகை மகிழ்ச்சியாக கொண்டாடப்பட்டு வரும் நிலையில், ஆதரவற்ற நாய் ஒன்றினை தத்தெடுத்து அதற்கான உணவு செலவை ஏற்றுக்கொள்வது குறித்து பதிவு ஒன்றினை வெளியிட்டுள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள பதிவில் தீபாவளிக்கு நான் ஒரு சிறப்பான விஷயத்தை செய்கிறேன்... மீட்கப்பட்ட ஆதரவற்ற நாய் ஒன்றின் உணவிற்கு தான் ஸ்பான்சர் செய்வதாகவும் கூறியுள்ளார்.

ஆதரவற்ற நாய்க்கு ஸ்பான்சர்
நடிகை த்ரிஷா ரூ.1000 இருந்தால் ஒரு நாய்க்கு ஒரு மாதம் முழுமையாக உணவளிக்க முடியும். 30 நாட்களுக்கு அதன் வயிற்று பசியை தீர்த்து மகிழ்ச்சியான தருணத்தினை தரும். நீங்களும் என்னுடன் இணைந்து ரூ.1000 செலுத்தி ஒரு நாயின் உணவிற்கு உதவுங்கள்.
அவற்றின் வாழ்க்கையிலும் சிறிய மகிழ்ச்சியினை கொண்டு வருவதற்கும், புளூ கிராஸ் ஆஃப் இந்தியா அமைப்பிற்கு நிதியுதவி செய்யுங்கள் என்றும் இந்த தீபாவளியை ஆதரவற்ற நாய்களுக்கு சிறப்பானதாக மாற்றுவோம் என்று பதிவிட்டிருக்கின்றார்.

நடிகை த்ரிஷா ஏற்கனவே விலங்குகள் நல அமைப்பான ப்ளூ கிராஸ் ஆஃப் இந்தியாவுடன் சேர்ந்து பல சமூக சேவையினை செய்துவரும் நிலையில், பண்டிகை காலத்தில் பட்டாசு மற்றும் கொண்டாட்டத்தினைத் தாண்டி ஆதரவற்ற விலங்குகளின் பசியினை போக்க முன்வந்து நிதி திரட்டவும் செய்கின்றார்.
த்ரிஷாவின் இந்த செயலை ரசிகர்கள் பலரும் பாராட்டி தங்களது கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |