கோடை வெப்பத்தில் இருந்து தப்பிக்க என்ன செய்ய வேண்டும்?
கோடை காலம் வந்துவிட்டாலே வெயிலின் தாக்கம் அதிகரித்து விடுகின்றது. இதனால் மக்கள் கடும் அவதியில் சிக்கிக் கொள்கின்றனர்.
தற்போது வெயில் என்பது அளவுக்கு அதிகமான இருந்து வரும் நிலையில், குழந்தைகள் முதல் பெரியவர்கள் அனைவரும் கடும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.
இந்நிலையில் கோடை வெப்பத்தில் இருந்து தப்பிக்க சில வழிமுறைகளை இங்கு தெரிந்து கொண்டு அதனை கடைபிடித்தால், நிச்சயம் வெயிலிலிருந்து தப்பிக்கலாம்.
கோடை வெப்பத்திலிருந்து தப்பிக்க
வெயில் காலம் ஆரம்பித்து விட்டாலே தண்ணீர் அதிகமாக பருக வேண்டும். பழச்சார், இளநீர் போன்ற திரவ உணவுகளை அதிகமாக எடுத்துக் கொள்ள வேண்டும்.
உடல் வெப்பநிலையைக் குறைப்பதற்கு அடிக்கடி குளிர்ந்த நீரில் நீராட வேண்டும். பருத்தி போன்ற லேசான மற்றும் தளர்வான ஆடைகளை அணிய வேண்டும்.
வெயிலில் நேரடியாக வெளியே செல்வதை தவிர்க்க வேண்டும். இரவில் போதுமான தூக்கம் மிக அவசியமாகும்.
சன்ஸ்கிரீன், தொப்பி, கண்ணாடி போன்றவற்றை பயன்படுத்தி சூரிய ஒளியிலிலிருந்து பாதுகாத்துக் கொள்ளுங்கள். காரம், எண்ணெய் அதிகம் உள்ள உணவுகளை தவிர்க்கவும்.
தர்பூசணி, வெள்ளரி, கீரை போன்ற நீர்ச்சத்து நிறைந்த பழங்கள் மற்றும் காய்கறிகளை அதிகம் சாப்பிடவும்.
தயிர், மோர் போன்ற புளித்த உணவுகள் உடல் வெப்பநிலையை குறைக்க உதவும். மேலும் வீட்டின் ஜன்னல் மற்றும் கதவுகளை மூடி வைத்து விசிறி, ஏசி போன்றவற்றை பயன்படுத்தவும்.
மேலும் தாவரங்களை வளர்ப்பது வீட்டை குளிர்ச்சியாக வைத்திருக்க உதவும்.