தக்காளி காய்ச்சல் வந்த உடனே என்ன செய்யவேண்டும்?
கேரளாவில் தக்காளி காய்ச்சல் என்ற வைரஸ் குழந்தைகளை தாக்கி பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது.
இந்த பாதிப்பு ஏற்பட்டால் குழந்தைகளுக்கு தொண்டையில் கடுமையான வலி ஏற்படும். உணவு அருந்தும்போது வலி ஏற்பட்டு, விழுங்க சிரமம் ஏற்படும்.
சருமத்திலும், தாடையிலும் தக்காளி நிறத்தில் சிறு சிறு திட்டுகள் வரும். இதுதான் இந்த தொற்றுக்கான அறிகுறியாகும்.
ஒருவரிடமிருந்து மற்றொருவருக்கு இது பரவும் தன்மை கொண்டது. இதைதடுக்க என்ன செய்யவேண்டும்? என்ன செய்யக்கூடாது என தெரிந்துகொள்வோம்.
சினிமாவை விட்டு விலகுகிறேன்? நடிகர் சித்தார்த்தின் அதிரடி முடிவு!
செய்யவேண்டியவை
தக்காளி காய்ச்சல் ஏற்பட்ட குழந்தைகளுக்கு கஞ்சி, பழச்சாறுகள், இளநீர் போன்றவற்றை வழங்கலாம். இந்த நோயின் அறிகுறி தோன்றினாலே உடனே மருத்துவரை அணுகி சிகிச்சை பெற்றால் விரைவில் குணமடையும்.
இந்தத் தொற்றுக்குள்ளான குழந்தைகளை தொற்றின் அறிகுறிகள் குணமாகும் வரை தனிமையில் வைத்திருப்பது அவசியம்.
கைகளை அடிக்கடி சோப்பு கொண்டு கழுவுதல் , தன் சுத்தம் பேணுதல், நோய் அறிகுறிகள் வெளிப்படுத்தும் குழந்தைகளின் டயாபர்களை முறைப்படி அப்புறப்படுத்துதல் நோயை கட்டுப்படுத்த முடியும்.
இந்நோய் குறித்து அச்சப்பட தேவையில்லை குழந்தைகளை விழிப்புணர்வுடன் பார்த்துக்கொண்டால் போதுமானது.
