மறந்தும் கூட இந்த பொருட்களை வெறும் வயிற்றில் சாப்பிடாதீங்க... ஆபத்து உறுதி!
ஆரோக்கியமான வாழ்க்கை முறையை கடைப்பிடிப்பதில் காலை உணவு பிரதான இடம் வகிக்கின்றது.
எனவே காலை உணவாக எதனை எடுத்துக்கொள்ள வேண்டும் என்பது தொடர்பில் அக்கறை செலுத்தப்பட வேண்டியது எந்தளவுக்கு முக்கியமோ, அதே அளவுக்கு காலை வெறும் வயிற்றில் எதை சாப்பிட கூடாது என்பதும் முக்கியமானதாகும்.
அந்த வகையில் காலை வெறும் வயிற்றில் சாப்பிடவே கூடாதா உணவுகள் தொடர்பில் இந்த பதிவில் பார்க்கலாம்.
சிட்ரஸ் பழங்கள்
பெரும்பாலான மக்கள் காலை உணவாக பழங்களை சாப்பிடுவார்கள், ஆனால் சில பழங்களை காலையில் சாப்பிடுவது நல்லதல்ல. அதிலும் சிட்ரஸ் பழங்களை காலை உணவாக எடுத்துக்கொள்வது உடல் ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்கும்.
சிட்ரஸ் பழங்கள் எனப்படுவது சிற்றிக் அமிலம் நிறைந்த பழங்களை குறிக்கும் ஆரஞ்சி, எலுமிச்சை, போன்ற வைட்டமின் -சி சத்து அதிகம் காணப்படும் புளிப்பு சுவையான பழங்களை குறிக்கின்றது.
இது அமில தன்மை கொண்டது, இது வாயு பிரச்சனையை அதிகரிக்கிறது. சிட்ரஸ் பழங்கள் காலை உணவாக எடுத்துக்கொள்ளும் பட்சத்தில் ஒவ்வாமையை ஏற்படுத்தக் கூடியது.மேலும் இது பல உடல் பிரச்சினைகளை ஏற்படுத்துகிறது.
சிட்ரஸ் பழச்சாறுகளில் உள்ள சிட்ரிக் அமிலம் தோல், வாய் மற்றும் வயிற்றில் எரிச்சலை ஏற்படுத்துகிறது.
வாழைப்பழம்
வெறும் வயிற்றில் வாழைப்பழம் சாப்பிடுவது இரத்தத்தில் மெக்னீசியத்தின் அளவை அதிகரிக்கச் செய்கின்றது.காலையில் வாழைப்பழம் சாப்பிடுவது இதயத்தின் ஆரோக்கியத்தை பெரிதும் பாதிக்கின்றது.
பேரிக்காய்
வெறும் வயிற்றில் பேரிக்காய் சாப்பிடுவது உங்கள் வயிற்றின் உட்புற சதைகளில் பாதிப்பை ஏற்படுத்தும்.வயிற்றின் உட்புற சவ்வானது மென்மையானதாக இருப்பதால் அதிகளவு நார்ச்சத்து கொண்ட பொருட்களை வெறும் வயிற்றில் சாப்பிடுவது அடிவயிற்றில் வலியை ஏற்படுத்தும்.
கார்பனேற்றப்பட்ட பானங்கள்
கார்பனேற்றப்பட்ட பானங்களில் அதிகளவு சர்க்கரையும், கார்பன்-டை- ஆக்சைடும் இருப்பதால் இது வயிற்றில் வாயுவின் அளவை கணிசமாக அதிகரிக்கும். மேலும் வயிற்றுக்குள் வீக்கத்தை ஏற்படுத்தும்.
வெள்ளரிக்காய்
வெள்ளரிக்காயில் அதிகளவில் நார்ச்சத்துக்கள் இருப்பதால் வெள்ளரிக்காய் மற்றும் காய்கறிகளை வெறும் வயிற்றில் சாப்பிடுவது செரிமானத்தை தாமதமாக்குவதுடன் வயிற்று வலியையும் உண்டுப்பண்ணும்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |