பாரிஸ் அருங்காட்சியக கொள்ளைக்கு இது தான் காரணமா? வெளியான அதிர்ச்சி தகவல்!
பிரான்சின் பாரிஸில் அமைந்துள்ள உலகப்புகழ் பெற்ற லூவ்ரே அருங்காட்சியகத்தில் நடைபெற்ற கொள்ளை சம்பவம் தொடர்பில் வெளியாகியுள்ள புதிய தகவலானது அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.
கடந்த அக்டோபர் 19ம் தேதி, அந்த அருங்காட்சியகத்தில் சினிமா பாணியில் நடைபெற்ற இந்த துணிகரச் சம்பவத்தில், சுமார் 102 மில்லியன் டாலர் மதிப்பிலான அரச குடும்ப நகைகள் திருடப்பட்டன. குறித்த கொள்ளை சம்பவமானது உலகம் முழுவதும் பெரும் பரபரப்னை ஏற்படுத்தியது.

வியக்க வைக்கும் காரணம்
இப்போது வெளியாகியுள்ள தகவலின் அடிப்படையில் அருங்காட்சியகத்தின் பாதுகாப்பு அமைப்பில் பயன்படுத்தப்பட்ட Password மிகவும் பலவீனமானதாக இருந்ததாக அறியப்படுகின்றது.
அதிர்ச்சிகரமான, அந்த கடவுச்சொல் அருங்காட்சியகத்தின் பெயரான “லூவ்ரே” என்பதே என கூறப்படுகிறது. இது பாதுகாப்பு நெறிமுறைகளில் கடுமையான அலட்சியத்தை வெளிப்படுத்துவதாக நிபுணர்கள் விமர்சித்து வருகின்றனர்.

விசாரணைக்காக ஆஜரான லூவ்ரே அருங்காட்சியக இயக்குநர் லாரன்ஸ் டெஸ் கார்ஸ், அருங்காட்சியகத்தின் சில பகுதிகளில் போதுமான சிசிடிவி கேமராக்கள் இல்லாததும், திருடர்கள் நுழைந்த ஜன்னலை சரியாக கண்காணிக்காததும் தங்கள் தவறாக இருப்பதை ஒப்புக்கொண்டுள்ளார்.

உவக அளவில் புகழ்பெற்று காணப்படும் லூவ்ரேவில் அருங்காட்சியகத்தில் இத்தகைய குறைபாடுகள் ஏற்பட்டிருப்பது பாதுகாப்பு நடைமுறைகள் குறித்து கடுமையான கேள்விகளை எழுப்பி, வருவதுடன் உலகளாவிய ரீதியில் கடும் விமர்சனங்களுக்கும் உள்ளாகியுள்ளது.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |