அதிகமான பெண்கள் ஆண்களிடம் எதிர்ப்பார்ப்பது இதை தான்... என்னனு தெரியுமா?
பொதுவாக அனைவருமே தங்கள் மனதுக்கு பிடித்தவர்கள் தங்களின் விருப்பங்களை நிறைவேற்ற வேண்டும் எனவும் தங்கள் சொல்வதை கேட்க வேண்டும் எனவும் நினைப்பது மிகவும் சாதாரணமான விடயம் தான்.ஆனால் அவ்வாறான ஒரு துணை கிடைப்பது தான் அசாத்தியமானது.
ஆண்கள் பெண்களை கவர வேண்டும் என்பதற்காக பல்வேறு முயற்சிகளை மேற்கொள்கின்றார்கள். பெண்கள் ஆண்களை விடவும் உணர்வுகளுக்கு முக்கியத்துவம் கொடுப்பவர்களாக இருக்கின்றனர்.
அந்த வகையில் பெண்கள் ஆண்களிடம் முக்கியமாக எதிர்பார்க்கும் விடயங்கள் என்னென்ன என்பது குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.
எந்த குணங்களை விரும்புகின்றனர்?
பெண்கள் தங்கள் உணர்வுகளுக்கு ஆதரவான, அவர்கள் மனச்சோர்வடைந்தால் அவர்களுக்கு ஆறுதல் அளிக்கக்கூடிய மற்றும் பாதுகாப்பு உணர்வை கொடுக்கும் ஆண்களை அதிகம் விரும்புகிறார்கள்.
பெண்கள் சரியானதைக் காக்கத் தயாராக இருக்கும் அதாவது தவறுக்கு எதிராக குரல் கொடுக்கும் ஆண்களையும் நேர்மையாகவும் உண்மையாகவும் நடந்துக்கொள்ளும் ஆண்களையும் அதிகம் விரும்புகின்றார்கள்.
பெண்கள் ஏதேனும் ஒரு விடயம் தொடர்பில் ஆண்களிடம் மனம் விட்டு பேசும்போது ஆண்களின் முழு கவனமும் அவர்கள் பேசும் விடயத்தில் இருக்க வேண்டும் என எதிர்பார்ப்பார்கள். அப்படி கவனம் செலுத்தும் ஆண்களை தான் பெண்கள் அதிகம் விரும்புகின்றனர்.
தங்களிடம் மென்மையாக நடந்துக்கொள்ளும் ஆண்கள் பெண்களால் அதிகம் ஈர்க்கப்படுகின்றார்கள். மேலும் பொய் சொல்லும் ஆண்களை வெறுக்கின்றார்கள்.
வீட்டு வேலைகளை பகிர்ந்துக்கொள்ளும் ஆண்களையும், மாதத்தில் ஒரு முறையாவது சமைத்து கொடுக்கும் ஆண்களையும் அதிகமான பெண்கள் விரும்புகின்றனர்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |