சூடான உணவுகளை ஃபிரிட்ஜில் வைப்பது சரியா? பிரச்சனையை கட்டாயம் தெரிஞ்சிக்கோங்க
சூடான உணவை குளிர்சாதனப்பெட்டியில் வைப்பதால் ஏற்படும் பிரச்சனைகள் என்னென்ன என்பதை தெரிந்து கொள்வோம்.
இன்றைய காலத்தில் குளிர்சாதனப்பெட்டியில் உணவுகளை வைத்து சாப்பிடுவதை நம்மில் பெரும்பாலான நபர்கள் செய்து வருகின்றனர்.
மேலும் மீதமான உணவுகளை ப்ரிஜில் சேகரித்து வைத்து வருகின்றோம். குளிர்சாதனப்பெட்டியில் வைக்கும் உணவுகள் அதிகமாக கெட்டுப்போகாமல் இருக்கின்றது.
ஆனால் ஒருசிலர் சமைத்து சூடாக இருக்கும் உணவுகளை அப்படியே ப்ரிட்ஜில் வைத்து விடுகின்றனர். இவ்வாறு வைப்பதால் உணவு விஷமாவதுடன், குளிர்சாதனப் பெட்டியின் கம்ப்ரஸரில் பாதகமான விளைவை ஏற்படுத்துகின்றது.
சமைத்த உணவினை இரண்டு மணி நேரத்திற்கு மேல் அறை வெப்பநிலையில் வைத்திருக்கக்சூகூடாது. அதுவே 32 டிகிரி செல்சியஸிற்கு மேல் இருந்தால் உணவை ஒரு மணி நேரத்திற்குள் குளிர்சாதனப்பெட்டியில் வைக்கவும். நீண்ட நேரம் வெளியே வைத்திருந்தால் பாக்டீரியாக்களின் வளர்வது அதிகமாகும்.

பாதிப்புகள் என்ன?
அடுப்பிலிருந்து உணவை இறக்கியதும், உடனே குளிர்சாதனப்பெட்டியில் வைப்பது தவறாகும். இவ்வாறு வைப்பதால் குளிர்சாதனப்பெட்டியில் இருக்கும் மற்ற உணவுகளும் கெட்டுவிடுமாம். மேலும் இவை குளிர்சாதனப்பெட்டி கம்ப்ரஸருக்கு அதிக அழுத்தம் கொடுத்து செயல்திறனைக் குறைக்குமாம்.

ஆகவே சூடாக இருக்கும் தருணத்தில் ப்ரிட்ஜில் வைக்காமல் அறை வெப்பநிலைக்கு வந்த பின்பே வைக்கவும். அதே போன்று பெரிய கொள்கலன்களில் நிரப்பாமல், உணவுக்கு ஏற்ப கொள்கலன்களில் நிரப்பவும்.
குளிர்சாதனப்பெட்டியில் வைக்கும் உணவுகளை கட்டாயம் மூடி வைக்கவும். மூடிவைக்காமல் திறந்து வைப்பது பூஞ்சை வாசனை ஏற்படுவதுடன், உணவு சீக்கிரமாக கெட்டுப்போய்விடும். ஆதலால் காற்று புகாத கொள்கலன்களில் உணவை சேமிக்கவும்.

குளிர்சாதனப் பெட்டியை அளவுக்கு அதிகமாக நிரப்ப வேண்டாம்: குளிர்சாதனப் பெட்டியை அளவுக்கு அதிகமாக நிரப்புவதும் நல்ல யோசனையல்ல. குளிர்ந்த காற்று தடையின்றிச் சுழன்று வருவதற்கு உள்ளே சிறிது இடம் இருக்க வேண்டும். குளிர்சாதனப் பெட்டி அளவுக்கு அதிகமாக நிரம்பியிருந்தால் எல்லா உணவுப் பொருட்களும் சீராகக் குளிராது, இது உணவு கெட்டுப்போகும் அபாயத்தை அதிகரிக்கிறது.
மீதமுள்ள உணவை பொதுவாக 3 முதல் 4 நாட்களுக்குள் பயன்படுத்த வேண்டும். அதை விட அதிக நாட்கள் வைத்திருக்க விரும்பினால், அதை உறைவிப்பானில் (ஃபிரீசர்) சேமிப்பது சிறந்தது. சமைத்த உணவை சிறிது ஆறவிட்டு, இரண்டு மணி நேரத்திற்குள் குளிர்சாதனப் பெட்டியில் வைப்பதே மிகவும் பாதுகாப்பான வழியாகும். இவ்வாறு செய்வது உணவின் புத்துணர்வைப் பாதுகாக்கிறது, பாக்டீரியா தொற்று அபாயத்தைக் குறைக்கிறது மற்றும் குளிர்சாதனப் பெட்டியை நீண்ட காலத்திற்குச் சீராகச் செயல்பட வைக்கிறது.

| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |