புரட்டாசி மாதத்தில் அசைவம் சாப்பிடாமல் இருக்கீங்களா? மட்டன் சுவையில் மீல் மேக்கர் பிரியாணி
அசைவம் சாப்பிடாதவர்களுக்கு அசைவ சுவையில் மீல் மேக்கர் பிரியாணி எவ்வாறு செய்யலாம் என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.
பொதுவாக புரட்டாசி மாதத்தில் அசைவ உணவுகளை பெரும்பாலான நபர்கள் சாப்பிடுவதில்லை. ஒரு மாதம் அசைவ உணவை தவிர்ப்பது என்பது சற்று கடினமான காரியம் தான்.
அவ்வாறு அசைவ உணவுகளை சாப்பிட நினைக்கும் நபர்களுக்கு அருமையான பிரியாணி தான் மீல் மேக்கர் பிரியாணி ஆகும். அசைவ உணவைப் போன்ற சுவையில் அசத்தலாக எவ்வாறு செய்யலாம் என்பதை தெரிந்து கொள்வோம்.

தேவையான பொருட்கள்
பிரியாணி மசாலா அரைப்பதற்கு
மல்லி - 2 1/2 டேபிள் ஸ்பூன்
சுருள் பட்டை - 10 கிராம்
கிராம்பு - 15
ஏலக்காய் - 15
கருப்பு ஏலக்காய் - 2
மராட்டி மொக்கு - 2
அன்னாசிப்பூ - 4
ஜாவித்திரி - 1
சோம்பு - 3/4 டேபிள் ஸ்பூன்
ஷாஹி ஜீரா - 3/4 டேபிள் ஸ்பூன்
மிளகு - 1/2 டேபிள் ஸ்பூன்
கல்பாசி - 1 டேபிள் ஸ்பூன்
காய்ந்த ரோஜா இதழ்கள் - 1 டேபிள் ஸ்பூன்
கசூரி மெத்தி - 1 டேபிள் ஸ்பூன்
பிரியாணி இலை - 3 பெரியது
ஜாதிக்காய் - சிறிய ஏலக்காய் அளவு
ஊற வைப்பதற்கு
மீல் மேக்கர் - 1 1/2 கப் (15 நிமிடம் ஊற வைத்தது)
சீரக சம்பா அரிசி - 2 கப் (25 நிமிடம் ஊற வைத்தது)

மசாலா அரைப்பதற்கு
பச்சை மிளகாய் - 9
புதினா - 1 கைப்பிடி
கொத்தமல்லி - 1 கைப்பிடி
வெந்தயக்கீரை - 1/2 கைப்பிடி
பிரியாணி தாளிப்பதற்கு
எண்ணெய் - 3 டேபிள் ஸ்பூன்
நெய் - 1 டேபிள் ஸ்பூன்
பட்டை - 1 துண்டு
கிராம்பு - 3
அன்னாசிப்பூ - 1
ஏலக்காய் - 2
ஜாவித்திரி - சிறிது
பிரியாணி இலை - 1
கசூரி மெத்திரி - சிறிது
வெங்காயம் - 2 (நீளவாக்கில் மெல்லியதாக நறுக்கியது)
இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 1/2 டேபிள் ஸ்பூன்
அரைத்து வைத்துள்ள மசாலா
தயிர் - 2 டேபிள் ஸ்பூன்
தக்காளி - 1 (நறுக்கியது)
உப்பு - சுவைக்கேற்ப
ஊற வைத்துள்ள மீல் மேக்கர்
மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்
மல்லித் தூள் - 1 டேபிள் ஸ்பூன்
பிரியாணி மசாலா - 1 டேபிள் ஸ்பூன்
தண்ணீர் - 3 கப்
எலுமிச்சை சாறு - 3/4 டேபிள் ஸ்பூன்
ஊற வைத்த அரிசி
செய்முறை
முதலில் மீல் மேக்கரை கொதிக்கும் தண்ணீரில் போட்டு 15 நிமிடம் ஊற வைத்து, நன்றாக பிழிந்து எடுத்து சாதாரண தண்ணீரில் அலசி தண்ணீர் இல்லாமல் எடுத்துக் கொள்ளவும்.
பாத்திரம் ஒன்றில் பிரியாணிக்கு சீரக சம்பா அரிசியை சேர்த்து நன்றாக கழுவி 20 நிமிடம் ஊற வைத்துக் கொள்ளவும். பிரியாணி செய்வதற்கான மசாலா பொடியை வறுத்து அரைத்துக் கொள்ளவும்.
பின்பு மிக்சர் ஜாரில் பச்சை மிளகாய், கொத்தமல்லி, புதினா, வெந்தயக்கீரை ஆகியவற்றை சேர்த்து நன்கு மென்மையாக அரைத்துக் கொள்ளவும்.
பிரியாணி செய்வதற்கு பெரிய குக்கர் ஒன்றினை அடுப்பில் வைத்து எண்ணெய் மற்றும் நெய் சேர்த்து, தாளிப்பதற்கு கொடுத்த பொருட்களை சேர்த்து தாளிக்கவும்.

தொடர்ந்து நறுக்கிய வெங்காயம், இஞ்சி, பூண்டு பேஸ்ட் சேர்த்து வதக்கியதும், அரைத்து வைத்துள்ள மசாலா விழுதையும் சேர்த்து வதக்கி, தயிர் சேர்த்து நன்றாக கிளறவும்.
நறுக்கிய வைத்துள்ள தக்காளி மற்றும் உப்பு இவற்றினை சேர்த்து வதக்கி மீல் மேக்கரையும் சேர்க்கவும். பின்பு மஞ்சள் தூள், மல்லித்தூள், பிரியாணி மசாலா ஒரு ஸ்பூன் சேர்த்து நன்றாக கிளறிவிடவும்.
பின்பு 3 கப் தண்ணீர் சேர்த்து கொதிக்க வைத்து, அரிசியை போடவும். பின்பு எலுமிச்சை சாறு சேர்த்து குக்கரை மூடி வைத்து 1 விசில் விட்டு இறக்கவும், சுவையான மீல் மேக்கர் பிரியாணி தயார்.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |