பாடகி சுஜாவிற்கு தொண்டையில் என்ன பிரச்சனை? இதை குணப்படுத்த முடியுமா?
தென்னிந்திய பாடகி சுஜாதா கடந்த ஐந்து வருடங்களாக தொண்டையில் இருந்த பிரச்சனை காரணமாக பாடுவதை நிறுத்தி இருந்தார். இதை குணப்படுத்தலாமா என்பதை பார்க்கலாம்.

பாடகி சுஜாதா
தென்னிந்திய பாடகி சுஜாதா கடந்த ஐந்து வருடங்களாக சினிமாவில் பாடுவதை நிறுத்தி உள்ளார் என ஒரு மேடையில் கூறி இருந்தார். இதற்கு காரணம் அவரின் தொண்டையில் இருக்கும் பிரச்சனை தான் எனவும் அவர் கூறி இருந்தார்.
பல இசை ஜாம்பவான்களின் இசையில் பாடிய சுஜாதா தற்போது ஐந்து வருடங்களுக்கு மேலாக பாடாமல் இருக்க காரணம் அவரின் தொண்டையில் இருக்கும் பிரச்சனை எனப்பது ரசிகர்களுக்கு அதிர்ச்சியை கொடுத்தது. இந்த நிலையில் இந்த தொண்டை பிரச்சனை பற்றி ஆராய்வோம்.

தொண்டை பிரச்சனை வந்தால் பாட முடியாதா?
சுஜாதாவிற்கு தொண்டையில் பிரச்சனை என்று கூறி இருந்தார். ஆனால் என்ன பிரச்சனை என்பதை கூறவில்லை. பொதுவாக பாட முடியாத அளவிற்கு பிரச்சனை என்றால் அதை (Vocal health issue) என்று சொல்லப்படுகின்றது.
இந்த தொண்டை தொடர்பான நீண்ட காலக் கோளாறு (Vocal health issue) காரணமாக தான் பாடுவதை நிறுாத்தி உள்ளார் என்பது உறுதியாகி உள்ளது.

Vocal health issue
நமது தொண்டையில் குரல் நாண்கள் சரியாகச் செயல்படும் திறனைப் பாதிக்கும் போது இது பேச்சு, சுவாசம் மற்றும் விழுங்குவதில் சிரமம் போன்ற இன்னும் பல சிக்கல்களை ஏற்படுத்தும். இது வைரஸ் தொற்றுகள்,பாக்டீரியா தொற்று போன்றவற்றால் உண்டாகலாம்.
பெங்களூரில் சிறந்த ENT நிபுணர் கூற்றுப்படி,
இந்த Vocal health issue குரல் நாண்கள் பகுதி அல்லது முழுமையாக முடக்கப்படலாம் என்று கூறி உள்ளார். இது குரல் தண்டு நரம்புகளை பாதிக்கும் வைரஸ் தொற்று, அறுவை சிகிச்சையின் போது நரம்பு காயம், பக்கவாதம் அல்லது புற்றுநோயால் ஏற்படலாம்.
இதன்போது குரல் நாண்கள் இரண்டும் கிட்டத்தட்ட மூடிய நிலையில் செயலிழந்திருந்தால், உங்களுக்கு தொண்டையில் சத்தம் அல்லது கடினமான சுவாசம் இருக்கலாம்.

ஒரு குரல் தண்டு திறந்த நிலையில் செயலிழந்தால், பலவீனமான, மூச்சுத்திணறல் குரல் இருக்கலாம். சிலர் காலப்போக்கில் சரியாகி விடுவார்கள்.
ஆனால் சிலருக்கு இது நிரந்தரமாகவும் இருக்கும். எனவே இந்த நோயை குரல் சிகிச்சை படி குணப்படுத்தலாம். அப்படி குணமாகவில்லை என்றால் அறுவை சிகிச்சை மேற்கொண்டு இதை சரி செய்யலாம்.
இது எந்த அளவுக்கு பாதித்திருக்கிறது என்பதையே பொறுத்து குணமாகும் வாய்ப்பு மாறுபடும். ஆரம்பத்திலேயே சரியான ENT மருத்துவரை அணுகினால் நல்ல முன்னேற்றம் கிடைக்கலாம்.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |