இந்த பொருள் பிரிட்ஜ் மேல் இருந்தால் கேடு- இனி இந்த தவறை செய்யாதீங்க
சில வீடுகளில் பிரிட்ஜை பார்க்கும் பொழுது சற்று கவலையாக இருக்கும். ஏனெனின் வீட்டில் அடிக்கடி பயன்படுத்தும் அல்லது பாவணைக்கு எடுக்காத பொருட்களை அதன் மேல் அடுக்கி வைத்திருப்பார்கள்.
இந்த பொருட்கள் தான் வைக்க வேண்டும், இந்த பொருட்களை வைக்கக்கூடாது என்ற வரையறை இல்லாமல் பொருட்கள் வைக்கப்பட்டிருக்கும்.
பிரிட்ஜுன் மேல் பொருட்கள் வைக்கும் பொழுது சில பொருட்கள் வீணாகப் போகிறது. அது தெரியாமல் நாம் அன்றாடம் பயன்படுத்தி வருகிறோம்.
முதலில் பிரிட்ஜ் மேல் என்னென்ன பொருட்கள் வைக்கலாம் மற்றும் வைக்கக் கூடாது என்பவற்றை தெரிந்திருக்க வேண்டும். ஒரு ஆபத்து வரும் முன்னர் அதனை தடுப்பது நன்மை தரும்.
அப்படியாயின், வீட்டில் மினி களஞ்சிய பெட்டியாக இருக்கும் பிரிட்ஜுன் மேல் என்னென்ன பொருட்களை வைக்கக் கூடாது என்பதை பதிவில் பார்க்கலாம்.
1. மிகவும் கனமான பொருட்கள்
ஃப்ரிட்ஜ் மீது பொருட்களை வைத்து களஞ்சியப்படுத்தும் பழக்கம் இருப்பவர்கள் கனமான பொருட்களை வைப்பதை தவிர்க்க வேண்டும். தவறும் பட்சத்தில் நீண்ட நாட்களுக்கு பயன் தரும் ஃப்ரிட்ஜ் குறுகிய காலத்தில் சேதமடைந்து விடும்.
2. மருந்துகள்
சில வீடுகளில் அன்றாடம் எடுத்துக் கொள்ளும் மருந்து வில்லைகள் கொண்ட போத்தல்கள் ஃப்ரிட்ஜுன் மீது தான் இருக்கும். இது உங்கள் மருந்து வில்லைகளில் குளிர்ச்சியை ஏற்படுத்தி ஒருவிதமான ஈரப்பதத்தை உண்டு பண்ணும். குளிர்ச்சியான இடத்தில் இருந்து மீண்டும் வெப்பம் கொண்ட இடத்தில் வைக்கும் பொழுது மருந்தின் ஆற்றல் குறைய வாய்ப்பு உள்ளது.
3. எலக்ட்ரிக் உபகரணங்கள்
சமையலறையில் பயன்படுத்தும் சிறிய எலக்ட்ரிக் உபகரணங்களை ஃப்ரிட்ஜுக்கு பின்னால் ஒரு இடம் ஒதுக்கி அதில் மாட்டி வைப்பார்கள் அல்லது ஃப்ரிட்ஜுக்கு மேல் வைத்து களஞ்சியப்படுத்துவார்கள். அது இலகுவில் வெப்பமடைய வாய்ப்பு உள்ளது.
4. பிளாஸ்டிக் பாத்திரங்கள்
பிளாஸ்டிக் பாத்திரங்களை ஒரு போதும் ஃப்ரிட்ஜுக்கு மேல் வைப்பதை குறைத்துக் கொள்ள வேண்டும். வெப்பம் படும் போது பாத்திரங்கள் சேதமடைய வாய்ப்பு உள்ளது.
5. தீப்பெட்டி
பயன்பாட்டிற்கு பின்னர் ஈஸியாக அடுத்த தடவை எடுத்துக் கொள்வதற்காக ஃப்ரிட்ஜுன் மீது வைப்பார்கள். இது வெளிப்புறத்தில் வெப்பத்தை ஏற்படுத்தி தீ பரவல் ஏற்படும்.
6. சமையல் எண்ணெய்
சமையல் எண்ணெயை எளிதாக ஃப்ரிட்ஜ் மீது வைப்பதை வீட்டு பெண்கள் பழக்கமாகவே வைத்திருப்பார்கள். அப்படி வைக்கும் பொழுது வெப்பமேற்றப்பட்டு, அதன் தரம் குறைந்து விடும். சுவையிலும் மாற்றம் காணலாம்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |