புரட்டாசி மாதத்தில் வளைகாப்பு செய்யலாமா? பித்ரு தோஷம் பாதிக்கப்படுமா? விரிவான விளக்கம் இதோ...
பொதுவாகவே புரட்டாசி மாதம் தற்போதைய இளைஞர்களுக்கு பிடிக்காத மாதமாக மாறுகிறது. அதிலும் அசைவ உணவுப் பிரியர்களுக்கு இந்த மாதம் எப்படா கழியும் என்று காத்திருப்பார்கள்.
பெருமாளுக்கு உகந்த மாதமான இந்த புரட்டாசி மாதம் ஆங்கில மாதமான செப்டம்பர் மாதம் மத்தியில் இருந்து அக்டோபர் மத்தியில் வரை இந்த மாதம் நீடிக்கிறது. இந்த புரட்டாசி மாதத்தில் செய்யக் கூடியவை எனவும் செய்யக் கூடாதவை என்றும் சில விடயங்கள் இருக்கிறது.
செய்யக் கூடியவை
புரட்டாசி மாதத்தில் குழந்தைகளுக்கு காது குத்துதல், மொட்டை அடித்தல் என்பற்றை தாரளமாக செய்யலாம்.
பெண்களுக்கு 7 அல்லது 9 ஆவது மாதங்களில் வளைகாப்பு நடத்தப்படும். இந்த மாதம் தாமதமானால் இரட்டை படை மாதம் ஆரம்பிக்கும் அதனால் இரட்டை படை மாதத்தில் வளைகாப்பு செய்ய மாட்டார்கள்.
புதிதாக கடை திறப்பது, வியாபாரம் செய்வது, தொழில் தொடங்குவது உள்ளிட்ட எந்த காரியமாக இருந்தாலும் செய்யலாம்
கல்வி சம்பந்தமான விஷயமாக இருந்தாலும், இந்த நாளில் சிறப்பாக தொடங்கலாம்
இந்த புரட்டாதி மாதத்தின் வரலாறு என்ன? செய்யக் கூடிய மற்றும் செய்யக் கூடாத சுப நிகழ்வுகள் என்னென்ன என்பதை கீழுள்ள காணொளியில் முழுமையாக தெரிந்துக் கொள்ளலாம்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள். JOIN NOW |