சிரிக்கும் போது சிலருக்கு மட்டும் கன்னத்தில் குழி விழுவது ஏன்? வியக்க வைக்கும் காரணம்
பொதுவாக ஆண்களிலும் சரி பெண்களிலும் சரி சிலருக்கு சிரிக்கும்போது கன்னத்தில் அழகாக குழி விழுவதைப் பார்த்திருப்பீர்கள்.
இந்த கவர்சிகரமான கன்னக்குழி சிலருக்கு ஒரு கன்னத்திலும் இன்னும் சிலருக்கு இரண்டு கன்னத்திலும் ஏற்படுகின்றது.
இது மற்றவர்களின் கவனத்தை வெகுவாக ஈர்க்கின்றது. பெண்களை விட ஆண்களுக்கு கன்னத்தில் குழி விழுவது மிகவும் அரிதானது இப்படி கன்னத்தில் குழி விழுவது ஜோதிட ரீதியாக அதிர்ஷ்டம் என்ற கருத்து காணப்படுகின்றது.
ஆனால் அறிவியல் ரதியில் கன்னத்தில் குழி விழுவாற்கு என்ன காரணம் என இந்த பதிவில் பார்க்கலாம்.
என்ன காரணம்?
அது மரபு ரீதியாகவும் ஏற்பட வாய்ப்பு காணப்படுகின்றது. அதாவது பெற்றோரில் யாரேனும் ஒருவருக்கு கன்ன குழிகள் இருந்தால் அவர்களின் பிள்ளைகள் அல்லது பேரக்குழந்தைகளுக்கும் இவ்வாறு இருக்கும்.
கன்னத்தில் உள்ள தசை மற்றும் எலும்பு குறைபாடுகளின் பின்னணியிலேயே கன்னக்குழி ஏற்படுவதாக அறிவியல் மற்றும் மருத்துவ முறையினர் குறிப்பிடுகின்றனர்.
நமது கன்னங்களில் ஸிக்கோமேட்டிக்கஸ் மேஜர் என்ற தசை காணப்படுகின்றது. இந்த தசை இரு துண்டுகளாக பிரிவதாலேயே கன்னக்குழி ஏற்படுகிறது. உலகத்தில் 20-30% மக்களுக்கு மட்டுமே இவ்வாறு ஏற்படுகின்றது.
அதனால் இது ஒரு அரிதான விஷயமாகவே கருதப்படுகிறது. அத்துடன் இது அழகு, இளமை, அதிர்ஷ்டம் தருவதாக பெரும்பாலான மக்கள் நம்புகிறார்கள்.
அதனால் பெரும்பாலானவர்கள் கன்னக்குழியை செயற்கையாக செய்து கொள்ள டிம்பிள் பிலாஸ்டி சர்ஜரிகளையும் செய்துக் கொள்கின்றார்கள்.
30 நிமிடங்களில் செய்யப்படும் இந்த அறுவை சிகிச்சைக்கு இந்தியாவில் குறைந்தது ரூபாய் 35,000 முதல் ரூபாய் 60,000 வரை செலவாகின்றது.
சீனர்களின் கதைகளின் குறிப்பிடப்படுவதன் பிரகாரம், கன்னத்தில் குழிள்ளவர்கள் முன் ஜென்மத்தில் காதல் தோல்வியடைந்து , அதே துணை மறு பிறவியில் வேண்டும் என இறந்த பின்னரும் தவம் செய்து புதிய பிறவி எடுத்தவர்களாக இருப்பார்கள் என்ற சுவாரஸ்யமான கதையும் உள்ளது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |