மற்றவர்களால் அதிகம் வெறுக்கப்படுகின்றீர்களா? அப்போ இந்த 3 உண்மைகளை தெரிஞ்சிக்கோங்க...
பொதுவாகவே மனிதர்கள் அனைவரும் மற்றவர்களால் விரும்பபட்பட வேண்டும் என ஆசைப்படுவார்கள்.
அது இயற்கையாகவே மனிதர்களுக்கு இருக்கும் குணம் என உளவியல் நிபுணர்கள் குறிப்பிடுகின்றனர்.
ஆனால் பெரும்பாலான சந்தர்ப்பங்களில் நாம் மற்றவர்களால் வெறுக்கப்படுவதற்கும், புறக்கணிக்கப்படுவதற்கும் என்ன காரணம் என்று சிந்தித்திருக்கின்றீர்களா?
நீங்கள் மற்றவர்களால் மனதளவில் அதிகம் காயப்படுத்தப்படுகின்றீர்கள் என்றால், அதற்கான முக்கிய 3 காரணங்கள் என்னவென்று இந்த பதிவில் பார்க்கலாம்.
மற்றவர்களால் வெறுக்கப்பட என்ன காரணம்?
முதல் காரணம் - உங்களிடம் எதுவும் இல்லாத போதும் மற்றவர்களால் நீங்கள் மதிக்கப்பட வேண்டும் என்ற எண்ணம் உங்களிடம் இருந்தால், அது தான் மிகப்பெரும் முட்டாள்தனம். அதுவே மற்றவர்களால் நீங்கள் வெறுக்கப்படுவதற்கும் ஓரங்கட்டப்படுவதற்கும் முக்கிய காரணமாக இருக்கும்.
மற்றவர்கள் உங்களை வெறுக்கின்றார்கள் என நினைத்து வேதனையடைவதை விட்டுவிட்டு நிதி ரீதியாகவும் அறிவு ரீதியாகவும் உங்களை வளர்த்துக்கொண்டே இருங்கள் மரியாதை தானாக தேடிவரும்.
காரணம் இரண்டு - உங்களை மதிக்காத அல்லது நீங்கள் தேவைப்படாத ஒருவர் மீது அதிக பாசத்தையும் காதலையும் கொட்டிக்கொண்டு இருப்பதால் தான் அதிகமாக வெறுக்கப்படுகின்றீர்கள்.
இந்த உலகில் அதிகமாக கிடைக்கும் எந்த பொருளும் விலை உயர்ந்ததாகவும் இருப்பதில்லை, அது போல் தேவைக்கு அதிகமான கொடுக்கப்படும் அன்பு மற்றும் விதிவிலக்கல்ல.
அதனை புரிந்துக்கொண்டு உங்களின் அன்னை தேவையற்ற இடத்தில் செலுத்துவதை நிறுத்தினால் உங்களின் மதிப்பு தானாக உயரும்.
காரணம் மூன்று - உங்களால் ஒரு விடயத்தை செய்ய முடியவில்லை என்றால் அதற்கு நீங்கள் மட்டுமே பொறுப்பு என்பதை ஒத்துக்கொள்ள மறுப்பது தான் பெரும்பாலான இடங்களில் நீங்கள் வெறுக்கப்பட காரணமாக இருக்கும்.
ஒரு விடயத்தை சரியாக செய்வதை விட தன்னிடம் இருக்கும் பிழைகளை கண்டுப்பிடித்து சீர்படுத்துவதற்கே அதிக அறிவு தேவை. அதனை உணர்ந்துவிட்டாலே போதும் உங்களின் வெற்றியை யாராலும் தடுக்க முடியாது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW |