கொட்டாவி ஏன் வருகிறது தெரியுமா... அதற்குப் பின்னால் இருக்கும் அறிகுறி என்ன?
கொட்டாவி வருவதெல்லாம் இயற்கையான விடயம் தான். கொடடாவி விடும் போது ஆழமான மூச்சை உள்ளிருந்து நுரையீரலில் காற்றை நிறப்பும் செயலாகும். ஆனால் கொட்டாவி எதற்காக வருகின்றது என்ற கேள்வி பலருக்கு இருக்கிறது. அதற்காக விளக்கத்தை இந்தப் பதிவில் பார்க்கலாம்.
கொட்டாவி வருவதற்கான காரணம்
கொட்டாவி வருவதற்காக உறுதியான காரணம் தெரியாவிட்டாலும், நிபுணர்களின் கருத்துப்படி, தூக்கமின்மை, சோர்வு, மன அழுத்தம், பதற்றம், தூக்கத்தில் மூச்சுத்திணறல் அல்லது மயக்கம் போன்ற தூக்கக் கோளாறுகள், சில மருந்துகளின் பக்க விளைவுகள், நீரிழப்பு, உடல் வலிகள், சுவாச பிரச்சனைகள் ஆகியவை கொட்டாவி வர காரணமாக இருக்கலாம் என தெரிவிக்கப்படுகிறது.
அடிக்கடி கொட்டாவி வந்தால்
இவ்வாறு தினமும் கொட்டாவி வந்தால் நாள் ஒன்றுக்கு 7 இலிருந்து 8 மணி நேரத்திற்கு நன்றாக தூங்க வேண்டும்.
தொடர்ந்தும் உடற்பயிற்சி செய்து வந்தால் உடல் நலப்பிரச்சினைகளில் இருந்து விடுபடலாம்.
அடிக்கடி கொட்டாவி வந்தால் யோகா, தியானம், உடற்பயிற்சி, என்பவற்றை செய்ய வேண்டும்.
இரவில் தூங்க செல்லும் போது செல்போன், லேப்டாப் போன்ற சாதனங்கள் பக்கத்தில் வைத்துக் கொள்ள வேண்டாம்.
காபி, டீ மற்றும் மது அருந்துவதை தவிர்த்துக்கொள்ளுங்கள்.
அடிக்கடி கொட்டாவி வருபவர்களுக்கு வலிப்பு அல்லது கல்லீரல் செயலிழப்பு போன்ற பிரச்சினைகளில் அறிகுறியாக இருக்கலாம்.
மேலும், அதிகமான கொட்டாவி வந்தால் மருத்துவரை நாடுவது நல்லது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள். JOIN NOW |