'என் வழி தனி வழி' இந்த பென்குயின் தனியே செல்ல உண்மை காரணம் என்ன தெரியுமா?
சமூக வலைதளங்களில் கடந்த சில நாட்களாக பென்குயின் ஒன்றின் வீடியோ வைரலாகி வருகிறது.
அந்த வீடியோவில், ஒரு பென்குயின் தனது கூட்டத்தை விட்டுப் பிரிந்து, உணவு கிடைக்கும் கடல் பகுதியை நோக்கிச் செல்லாமல், ஆளில்லாத பனி மலைகளை நோக்கித் தனியாக நடந்து செல்கிறது.
இந்த வீடியோ 2007-ம் ஆண்டு பிரபல ஜெர்மானிய இயக்குனர் வெர்னர் ஹெர்சாக் எடுத்த “Encounters at the End of the World” என்ற ஆவணப்படத்தில் இடம்பெற்றுள்ளது.
பல ஆண்டுகள் கழித்து இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது. பொதுவாக பென்குயின்கள் கூட்டமாகத் தான் வாழும்.
ஆனால், இந்த ஒரு பென்குயின் மட்டும் தனது திசையை மாற்றி, சுமார் 70 கிலோமீட்டர் தொலைவில் உள்ள மலைகளை நோக்கி எதற்காகச் செல்கிறது? இந்த காணொளியை பார்த்து தெரிந்து கொள்ளுங்கள்.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |