crazy fact: "mouse" இன் உண்மையான பெயர் என்னன்னு தெரியுமா?
பொதுவாக தற்காலத்தில் கணனியின் உதவியின்றி எந்த துறையிலும் தொழில் புரிய முடியாதது என்றால் மிகையாகாது.
அந்ததளவுக்கு தொழில் நுட்ப மற்றும் அறிவியலானது விண்ணை முட்டும் அளவுக்கு வளர்ச்சி கண்டுள்ளது.
அந்த வகையில் தற்காலத்தில் கணனியின் பாகங்கள் குறித்து குழந்தைகளுக்கும் கூட தெரிந்திருக்கின்றது.
அப்படி கணனியின் முக்கிய பாகமாக திகழும் mouseற்கு ஏன் mouse(எலி) என்று பெயர் சூட்டப்பட்டது அதற்கு உண்மையாக பெயர் என்ன? என்று எப்போதாவது சிந்தித்திருக்கின்றீர்களா?
தமிழில் mouse என்ற கணனி பாகத்தின் பெயர் சுட்டி என்பதாகும். ஆனால் ஆங்கிலத்தில் mouse என்பது எலி என்றும் அதே நேரத்தில் கணனியின் பாகமான mouse என்றும் அர்த்தப்படுகின்றது.
இந்த குழப்பத்துக்கு பின்னணியில் இருக்கும் சுவாரஸ்யமான காரணம் குறித்து இந்த பதிவில் விளக்கமாக பார்க்கலாம்.
ஏன் mouse என்று அழைக்கிறார்கள்?
சுட்டி அல்லது மவுஸ் என்பது உங்கள் டெஸ்க்டாப் கணினி அல்லது மடிக்கணினியில் உள்ளீட்டை வழங்க பயன்படுத்தக்கூடிய ஒரு புற சாதனம் என்பது அனைவரும் அறிந்ததே.
கணினி சுட்டி டக்ளஸ் ஏங்கல்பர்ட் மற்றும் ரெனே சோமர் ஆகியோரால் கண்டுபிடிக்கப்பட்டது. கணினி அமைப்பைக் கட்டுப்படுத்தும் சுட்டியின் முதல் செயல்விளக்கம் 1968 இல் செய்யப்பட்டது.
1960 ஆம் ஆண்டு, ஸ்டான்போர்ட் ஆராய்ச்சி கல்வி நிறுவனத்தில் மின் பொறியியல் படித்த டக்ளஸ் ஏங்கல்பார்ட் என்பவர், மக்கள் புதிய கணினிகளைப் பயன்படுத்தும் விதம் பயனுள்ள வழியில் இல்லை என்பதை உணர்ந்தார்.
7D2EQQ
அந்த சமயத்தில், வீடியோ கேம்களின் இன்றைய கால ஜாய்ஸ்டிக் போன்ற சாதனமாக 'மவுஸ்' பயன்படுத்தப்பட்டது.
இந்தச் சாதனத்தைப் பயன்படுத்துவது எளிதாக இருந்தது. கணினியில் காட்டப்படும் 'கர்சரை'க் கட்டுப்படுத்தும் இரண்டு வட்ட சக்கரங்களைக் கொண்ட 'பக்' (Bug) என்ற சாதனத்தை ஏங்கல்பார்ட் உருவாக்கினார்.
ஸ்டான்போர்ட் ஆராய்ச்சி நிறுவனத்தில் உருவாக்கப்பட்ட "mouse" என்ற பெயர், ஆரம்பகால மாதிரிகள் இந்த சாதனத்தின் பின்புறத்தில் இணைக்கப்பட்ட ஒரு தண்டு இருந்தது, இது ஒரு எலியின் வால் அமைப்பை ஒத்ததாக இருந்தமையால் அதைனை எளிமையான குறிப்பிடுவதற்கு mouse என சொல் பயன்படுத்தப்பட்டுள்ளது.
ஆனால் mouse இன் உண்மையான பெயர் "ஒரு காட்சி அமைப்பிற்கான X-Y நிலை காட்டி" என்று குறிப்பிடப்பட்டது. ("X-Y Position Indicator for a Display System.) அதனை சொல்லும் அளவுக்கு பொறுமை யாருக்கும் இல்லாத காரணத்தால் இவர்கள் செல்லமாக குறிப்பிட்ட mouse என்ற பெயரே இன்று வரையில் புலக்கத்தில் உள்ளது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |