Blackmail என்பதன் உண்மையான அர்த்தம் இதுவா?
பிளாக்மெயில் என்ற வார்த்தையை அனைவரும் பயன்படுத்துகின்றோம். ஆனால் அதன் உண்மையான அர்த்தம் என்ன என்று எப்போதாவது சிந்தித்து பார்த்ததுண்டா?
பிளாக்மெயில் என்ற வார்த்தையை தற்காலத்தில் பெரும்பாலானவர்கள் ஒருவரின் தனிப்டபட்ட ரகசியங்களை அம்மளப்படுத்துவதாக மிரட்டி பணம் பறிப்பதை அல்லது வேறு ஏதாவது காரியங்களை சாதித்துக்கொள்வதை குறிப்பிட பயன்படுத்துகின்றார்கள்.
ஆனால் இந்த பிளாக்மெயில் என்ற வார்த்தையின் உண்மையான அர்த்தத்துக்கு பின்னால் ஒரு சுவாரஸ்யமான கதை இருக்கின்றது. இது குறித்து இந்த பதிவில் தெரிந்துக்கொள்ளலாம்.
பிளாக்மெயில்
பிளாக்மெயில் பற்றி தெரிந்துக்கொள்ள வேண்டும் என்றால் முதலில் ஒயிட்மெயில் என்றால் என்ன என்பது குறித்து அறிந்திருக்க வேண்டும்.
16 ஆம் நுற்றாண்டுகளில் இங்குலாந்து மற்றும் ஸ்கொட்லாந்துந்தில் எல்லை பகுதிகளில் வாழ்ந்த விவசாயிகளே முதல் முதலில் இந்த பிளாக்மெயில் என்ற வார்த்தை அதிகம் பயன்படுத்தப்பட்டது.
அந்காலப்பகுதியில் இவ்வாறு எல்லை பகுதிகளில் வாழ்ந்த விவசாயிகள் அரசாங்கத்துக்கோ அல்லது நிலப்பிரபுகளுக்கு அவர்கள் வெள்ளியில் வாடகை அல்லது வரி பணம் செலுத்த வேண்டியிருந்தது.
அவ்வாறு செலுத்தும் பணத்தை ஓயிட் ரெண்ட் (white rent) அதாவது வெள்ளை வாடகை என்று குறிப்பிட்டார்கள். இதையே தான் ஒயிட்மெயில் என்றும் குறிப்பிட்டார்கள்.
இந்த காலகட்டத்தில் mail என்பது தபால் சேவையை குறிக்கும் பழைய கால ஆங்கிலத்தில் male என்பதற்கு வாடகை அல்லது கப்பம் என்று அர்த்தம் இருந்தது.அதன் காரணமாகவே ஒயிட்மெயில் என்று குறிப்பிட்டுள்ளனர்.
அதே காலகட்டத்தில் இந்த விவசாயிகள் கொள்ளைக்காரர்களிடமிருந்து தங்களையும், தங்களின் நிலங்களையும் பாதுகாத்துக்கொள்ள வேண்டும் என்றால், ஒரு பாதுகாப்பு கட்டணத்தை கொள்ளைகாரங்களுக்கு செலுத்த வேண்டியிருந்தது.
அந்த கட்டணம்தை செலுத்துபவர்களின் பயிர்களையும் கால்நடைகளையும் தாக்கமாட்டோம் என கொள்ளையர்கள் உறுதியளிப்பார்களாம்.
அப்படி அரசாங்கத்துக்கு சட்டத்தின் பிரகாரம் கட்டப்படும் வாடகையை ஒயிட்மெயில் என்றும் கொள்ளையர்களுக்கு சட்டவிரோதமாக செலுத்தப்படும் தொகை பிளாக்மெயில் என்றும் குறிப்பிடப்பட்டது.
இதுவே 18 ஆம் நுற்றாண்டுக்கு பின்னர் வாடகை என்பதை தாண்டி மற்றவர்களை மிரட்டி அடிபணிய வைக்கும் அனைத்து செய்களையும் பிளாக்மெயில் என்று குறிப்பிட காரணமாக அமைந்தது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |