பிறந்தவுடன் ஏன் குழந்கைகள் அழுகின்றன தெரியுமா? இல்லாவிட்டால் என்ன நடக்கும்?
பொதுவாகவே எல்லா குழந்தைகளும் தாயின் கருப்பையில் இருந்து வெளியே வந்ததும் அதன் முதல் செயல்பாடு அழுகையாகத்தான் இருக்கும். அழுதால் தான் அந்த குழந்கை ஆரோக்கியமாக இருக்கின்றது என்று மருத்துவர்கள் கருவார்கள்.
அதற்கு என்ன காரணம் என்று எப்போதாவது சிந்தித்து பார்த்ததுண்டா? இது தொடர்பான உயிரியல் ஆதாரங்களுடனாக அறிவியல் விளக்கத்தை இந்த பதிவில் தெரிந்துக்கொள்ளலாம்.

குழந்தைகள் அழ என்ன காரணம்?
தாயின் கருவறையில் இருந்து வெயியேறியதும் அவர்களின் அழுகை வலி அல்லது துன்பத்தின் அறிகுறி கிடையாது. மாறாக அந்த சிசு உடலில் ஏற்படும் முதல் இயக்கத்தின் எதிர்வினையாகவே அது கருதப்படுகின்றது.
அதாவது, ஒரு குழந்தை தாயின் வயிற்றில் வளரும் போது சுமார் ஒன்பது மாதங்கள் பாதுகாப்பான, இருண்ட மற்றும் 37 டிகிரி வெப்பநியைலயில் தான் ஜீவிக்கின்றது. குறிப்பாக வயிற்றில் இருக்கும் போது குழந்தையின் நுரையீரலானது திரவத்தால் நிரப்பப்டிருக்கும்.

மேலும் குழந்தை கருப்பையில் இருக்கும் போது சுவாசிப்பது கிடையாது, மாறாக தாயின் இரத்தத்திலிருந்து தொப்புள் கொடியின் மூலமானவே ஆக்ஸிஜனைப் பெறுகிறது.
ஆனால் இந்த முயை குழந்தை கருப்பையை விட்டு வெளியேறிய சில நொடிகளிலேயே மாறிவிடுகின்றது. தாயின் வயிற்றில் இருந்து வெளியே வரும்போது, குழந்தை திடீரென அது முன்னர் இருந்த வசதியான சூழலில் இருந்து விடுபடுகின்றது.

குளிர்ந்த காற்று, வெளிச்சம் மற்றும் சத்தத்தால் நிரப்பப்பட்ட வெளி உலகிற்கு வந்ததும் குறித்த மாற்றம் குழந்தையை அசௌகரியமாக்குகிறது, அந்த அசௌகரியம் தான் அழுகையைத் தூண்டுகிறது. இன்னும் சொல்லப்போனால் ஒரு குழந்தை முதல் முறையாக அழும்போது, அவர்களின் நுரையீரல் காற்றால் நிரம்பி, ஆக்ஸிஜன் அவர்களின் இரத்த ஓட்டத்தில் பாயத் ஆரம்பிக்கும். அந்த கணம் முதல் தான் குழந்தை தனது துரையீரலால் சுவாசிக்க ஆரம்பிக்கின்றது.

குழந்தைகள் அழாவிட்டால் என்ன ஆகும்?
புதிதாகப் பிறந்த குழந்தையின் முதல் அழுகை முக்கியமாக கருதப்பட காரணம்,இது குழந்தை ஆரோக்கியமாக இருப்பதையும், அதன் நுரையீரல் மற்றும் பிற உறுப்புகள் சரியாகச் செயல்படுவதையும் குறிக்கிறது. அதனால்தான் குழந்தை பிறந்த பிறகு அழுவது முக்கியமானதானது என மருத்துவர்கள் குறிப்பிடுகின்றார்கள். அழுகை தான் நுரையீரல் மற்றும் சுவாச அமைப்பு செயல்படுவதைக் காட்டுகிறது.
ஒரு குழந்தை பிறந்ததும் அழவில்லை என்றால், மருத்துவர்கள் குழந்தையின் முதுகை மெதுவாகத் தேய்ப்பார்கள் அல்லது கால்களைத் தட்டுவார்கள்.எப்படியோ பேராடி அதனை அழ வைப்பார்கள். இதனை நேரடியாக பார்க்கும் வாய்ப்பை பெறாதவர்களும் சினிமாவிலாவது பார்த்திருக்ககூடும்.

குழந்தை அழாமல் பிறக்குமா?
எல்லா குழந்தைகளும் பிறக்கும்போது அழுகின்றன. இது தான் இயற்கை ஆனால் இரண்டு சந்தர்ப்பங்களில் குழந்தை அழாமல் பிறக்கின்றன. மிகவும் அரிதாக சில குழந்தை அமைதியாக இருக்கிறது ஆனால் நன்றாக சுவாசிக்கிறது. குழந்தை ஒரு ஆழமான மூச்சை எடுத்து அமைதியாக இருக்கிறது.
அவ்வாறான குழந்தையின் தோல் நிறம் ஆரோக்கியமாக இருக்கும் பட்சத்தில் குழந்தை சுறுசுறுப்பாகவும் இருக்கும் பட்சத்தில் அது அழாத போதும் ஆரோக்கியமான குழந்தையாக மருத்துவர்கள் கருதுவார்கள்.

இன்னொரு சந்தர்ப்பம் என்னவென்றால், குழந்தைக்கு உடனடி மருத்துவ சிகிச்சை தேவைப்படும் நிலையில், குழந்தை பிறக்கும் போது அழுவது கிடையாது. குழந்தைகளின் முதல் அழுகை முக்கியமானது. இல்லாவிட்டால் இது குழந்தைக்கு ஆபத்து என்பதை குறிக்கும்.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |