கருப்பு தான் உங்களுக்கு பிடித்த நிறமா? அப்போ உங்களிடம் நிச்சயம் இந்த குணங்கள் இருக்கும்
பொதுவாகவே ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு நிறத்தின் மீது அதிக ஈடுபாடு இருக்கும். அந்த நிறத்தில் தான் அதிக ஆடைகள் அணிவார்கள், அவர்களிடம் இருக்கும் பொருட்களும் பெரும்பாலும் அவர்களுக்கு பிடித்த நிறத்தை பிரதிபலிக்கும்.
ஒருவருக்கு பிடித்த நிறத்தை வைத்து அவரின் குணத்தை கணிக்க முடியும் என்றால் உங்களால் நம்ப முடிகின்றதா? ஆம் உளவியல் ரீதியில் நாம் விரும்பும் நிறத்துக்கும் நமது ஆளுமை மற்றும் விசேட குணங்களுக்கும் இடையில் நெருங்கிய தொடர்பு காணப்படுகின்றது.
அந்த வகையில் கருப்பு நிறத்தை விரும்புவோரின் அடிப்படை குணங்கள் மற்றும் விசேட ஆளுமைகள் எப்படி இருக்கும் என்பது குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.
உளவியல் உண்மைகள்
உளவியல் ஆய்வுகளின் பிரகாரம் கருப்பு நிற ஆடைகளை விரும்பும் நபர்கள் பெரும்பாலும் எதற்கும் அஞ்சாதவர்களாகவும் தன்னம்பிக்கை அதிகம் கொண்டவர்களாகவும் இருபார்கள்.
மிகவும் நேர்மையான குணம் கொண்டவர்களாகவும் உண்மையை நேருக்கு நேர் சொல்லும் தைரியசாலிகளாகவும் இருப்பார்கள்.
இவர்கள் மிகவும் தனித்துவமான குணம் கொண்டவர்களாகவும் அதே நேரத்தில் ஆடம்பர வாழக்கை மீது அதீத மோகம் கொண்டவர்களாகவும் இருப்பார்கள்.
கருப்பு நிறத்தை விரும்புபவர்கள் மற்றவர்களுக்காக தங்களின் சுதந்திரத்தை ஒருபோதும் விட்டுக்கொடுக்கவே மாட்டார்கள். இவர்கள் அன்புக்குரியவர்களை மகிழ்ச்சியாக வைத்துக்கொள்வதில் கில்லாடிகளாக இருப்பார்கள்.
கருப்பு உடை அணிபவர்கள் மற்றவர்களை விட வித்தியாசமான ஆளுமை கொண்டவர்களாகவும் எதையும் வேறு ஒரு புதிய கோணத்தில் சிந்திக்கும் ஆற்றல் கொண்டவர்களாவும் இருப்பார்கள்.
பெரும்பாலும் உறவுகளுக்கு வாழ்வில் அதிக முக்கியத்துவத்தை கொடுப்பார்கள். இவர்கள் இருக்கும் இடத்தில் தலைமை பதவியை எதிர்பார்ப்பார்கள்.
எந்த இடத்திலும் தங்களின் நிலை உயர்வாக இருக்க வேண்டும் என்ற குணம் இவர்களுக்கு நிச்சயம் இருக்கும்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |