Diwali Pooja Time : தீபாவளி பண்டிகைக்கு பூஜை செய்ய சிறந்த எது?
Diwali Pooja Time: தீபாவளி பண்டிகை நாளை கொண்டாடப்பட இருக்கும் நிலையில், எந்த நேரத்தில் பூஜை செய்யலாம்? எண்ணெய் குளியல் எப்பொழுது செய்ய வேண்டும்? என்ற தகவலை இந்த பதிவில் விரிவாக தெரிந்து கொள்ளலாம்.
பொதுவாக தீபாவளி பண்டிகை என்று வந்துவிட்டாலே எண்ணெய் குளியல், புத்தாடை, இனிப்புகள், பட்டாசு என ஒரே கொண்டாட்டமாகத் தான் இருக்கும்.
முந்தைய காலத்தில் வீட்டு பெரியவர்கள் பலகாரங்கள் அனைத்தையும் வீட்டிலேயே செய்து மகிழ்ச்சியாக கொண்டாடிய நிலையில், தற்போது பெரும்பாலான மக்கள் கடைகளில் வாங்குவதையே தான் விரும்புகின்றனர்.
தீபாவளி பண்டிகை என்றால் இருளை அகற்றி ஒளியை ஏற்றுவதும், தீமையை அழித்து நன்மை வெல்லும் நன்னாளாக கொண்டாடப்படுகின்றது.
ஆனால் தீபாவளியில் சில காரியங்களை நாம் கடைபிடித்து ஆக வேண்டும். எண்ணெய் குளியல் செய்வது... வீட்டில் பூஜை மேற்கொள்வதற்கான நல்ல நேரம் இவற்றினை குறித்து தெரிந்த கொள்வோம்.

பூஜை செய்ய சிறந்த நேரம்
நவம்பர் 8 ஞாயிற்றுகிழமை நாளை தீபாவளி பண்டிகை கொண்டாடப்படுகின்றது. நாளைய தினத்தில் எண்ணெய் குளியல் செய்வதற்கு அதிகாலை 4.30 மணி முதல் 06.06 மணிக்குள் அதாவது சூரிய உதயத்திற்கு முன்பு,செய்யவும்.
படையல் போடுவதற்கு காலை 7.45 முதல் 8.45 மணிக்குள் செய்வது சிறந்தது. லட்சுமி குபேர பூஜை மாலை 6.07 மணி முதல் 8.09 மணி வரை செய்யலாம்.
வாக்கிய பஞ்சாங்க கணிப்பின்படி நல்ல நேரம் காலை 7.45 முதல் 8.45, மாலை 3.25 முதல் 4.15 மற்றும் ராகு காலம் மாலை 4.30 முதல் 6 மணி வரை, எமகண்டம் மதியம் 12 முதல் 1.30 மணி வரை, குளிகை பிற்பகல் 3 முதல் 4.30 மணி வரை ஆகும்.
அதே போன் தீபாவளி அன்று அனுசரிக்கப்படும் முக்கிய விரதங்களில் கேதார கௌரி விரதமும் ஒன்றாகும்.

விரதத்தின் சிறப்புகள்
விரதத்தின் சிறப்பு என்னவெனில் சிவ பெருமான் மற்றும் பார்வதி தேவியை வழிபடுதல், குடும்ப ஒற்றுமை மற்றும் மங்கள வாழ்வு வேண்டி பிரார்த்தனை செய்தல்.
விரதம் இருந்து கயிறு அணிதல் என்பதாகும். இந்த விரதத்தினை ஐப்பசி மாத அமாவாசையான தீபாவளி அன்று மட்டும் கடைபிடிப்பார்கள். சில குடும்பத்தினர் தங்களது விருப்பத்திற்கு ஏற்ப நாட்களை அதிகரித்தும் விரதம் மேற்கொள்வார்கள்.

| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |