ஒருவரை விட்டு பிரியும் போது ஏன் “டா டா” சொல்கிறோம் தெரியுமா? இதற்குப் பின்னால் இப்படியாரு காரணமா?
பொதுவாகவே தற்போது எல்லோருக்கும் செல்போன் பாவனை அதிகரித்து விட்டது. காலையில் எழுந்து Good Morning சொல்வதில் இருந்து தூங்க செல்வதற்கு முன் Good Night சொல்லும் வரைக்கும் ஒவ்வொருவரும் இந்த செல்போனிலேயே எல்லாவற்றையும் இமோஜிக்கள் மூலமும் படங்கள் மூலமும் பகிர்ந்துக்கொள்கிறோம்.
ஆனால் நேரில் சந்தித்துக் கொண்டால் கட்டிப்பிடித்து வாழ்த்துக்களை சொல்லி பேசிக் கொள்கிறோம். அதிலும் ஒரு சிலர் அருகில் இருந்தால் கூட அவருக்கு செல்போனில் தான் அதையும் பகிர்ந்துக் கொள்வார்கள்.
அப்படி நேரில் ஒருவரை சந்தித்து அவரிடம் இருந்து விடைபெறும் போது அவருக்கு Bye அல்லது TATA என்று சொல்லி விடைபெறுவோம். அந்தவகையில், TATA என்ற வார்த்தைக்கு என்ன அர்த்தம் என்று பலர் கேள்வி கேட்டு வருகிறார்கள்.
TATA சொல்வதன் அர்த்தம்
TATA என்கிற இந்த வார்த்தை உலகில் இந்தியா மற்றும் பாகிஸ்தானில் தான் அதிகம் பயன்படுத்தப்படுகிறதாம். ஏன் ஆங்கிலேயர்கள் கூட பேசுவதில்லையாம்.
TATA என்கிற இந்த வார்த்தை பிரிட்டிஷ் ஆங்கிலத்தின் படி குட் பை என்ற பொருளாம் ஆனால் அவர்கள் ஏன் இந்த வார்த்தையை பயன்படுத்தவில்லை என்றுக் கேட்டால் TATA என்பது ஒரு வார்த்தை இல்லையாம் அது ஒரு வகை ஸ்லாங் ஆகும்.
பிரிட்டிஷ் பெண்கள் இந்த வார்த்தையை இந்தியப் பெண்களையும் அவர்களின் குழந்தையையும் அழைக்கப் பயன்படுத்தியதாகவும் சொல்லப்படுகிறது. மேலும், இந்த TATA வார்த்தை உருது மொழியில் இருந்து வந்ததாகவும் இதனை மீண்டும் சந்திப்போம் அல்லது குட்பை என்ற பொருள் உள்ள வார்த்தையாகும்.
மேலும், Ta Ta For Now என்பதை சுருக்கமாக டாடா என்ற சொல் பயன்படுத்தப்பட்டது. அதில் இருந்து இந்த வார்த்தையை அதிகமானோர் பயன்படுத்த தொடங்கியதாகவும் சொல்லப்படுகிறது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |