கனவில் கடவுள் வந்தால் என்ன பலன்? கட்டாயம் தெரிஞ்சிக்கோங்க
இரவிலும் சரி, பகலிலும் சரி தூக்கத்தில் கனவு வருவது மிகவும் இயல்பான விடயமாகவே காணப்படுகின்றது.
ஆனால் கனவில் வரும் விஷயங்கள் நம் வாழ்வில் நடக்கும் பல நிகழ்வுகளை குறிக்கின்றன. கனவில் வரும் சில விடயங்கள் மங்களகரமானதாக கருதப்படும் அதே வேளை சில விடயங்களை கனவில் காண்பது ஆபத்து குறித்து ஆழ் மனம் எச்சரிப்பதாக அமைகின்றது.
மகிழ்ச்சியான கனவுகளை கண்டால் மனம் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கும். இதுவே பயங்கரமான கனவு வந்தால் மனம் படப்பட்டப்புடன் இருக்கும்.
கனவில் தோன்றும் ஒவ்வொரு விடயத்துக்கும் பலன் இருக்கும் என்கின்றது கனவு சாஸ்திரம்.
அந்த வகையில் கனவில் தெய்வங்ளின் உருவங்களை கண்டால் என்ன பலன் என்பது குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.
என்ன பலன்?
கனவு சாஸ்திரத்தின் அடிப்படையில் தெய்வங்கள் கனவில் தோன்றினால் எதிர்காலம் குறித்து எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்பதை உணர்த்துவதாகவே அமையும்.
மேலும் கனவில் தெய்வ உருவங்கள் வருகின்றது என்றால் நமக்குள் தெய்வ சக்தி இருப்பதை உணர்த்துவதாகவும் அதனை எடுத்துக்கொள்ளலாம்.
நீங்கள் மனசோர்வுடன் இருக்கீன்றீர்கள் என்பதையும் உங்களுக்கு சிறந்த வழிக்காட்டல் தேவை என்பதையும் இது உணர்த்துகின்றது.
குறிப்பாக வாழ்வில் கடினமான சூழ்நிலையை எதிர்நோக்கும் போதும் முக்கியமான பிரச்சினைகளுக்கு தீர்வு தேடும் போதும் கடவுள்களைப் பற்றி கனவு வந்தால் இறை நம்பிக்கை உங்களுக்கு அதிகமாக இருக்கின்றது என்பதையே இது உணர்த்துகின்றது.
இது ஒரு உயர்ந்த சக்தியுடன் தொடர்பை ஏற்படுத்த முயற்சிப்பதை அல்லது வாழ்க்கையை சிறந்த பாதையில் அமைத்துக் கொள்ளவதற்கான நேரம் என்பதை உணர்த்துவதாகவும் இந்த கனவு அமையலாம்.
கடவுளைக் கனவு காண்பது ஒரு உயர்ந்த சக்தி உங்களுக்கு துணையாக இருப்பதையே உணர்த்துகின்றது.
அடிக்கடி கடவுள் உருவங்களை கனவில் காண்டால் நீங்கள் சவால்களை கடக்கப் போகிறீர்கள் அல்லது தடைகளை கடக்கப் போகிறீர்கள் எனபதை உணர்த்துகின்றது.
கடவுள் பற்றிய கனவுகள் கடினமான காலங்களில் நம்மை ஊக்குவிக்கின்றன. நம்பிக்கையையும் தைரியத்தையும் தருகிறது. இவ்வாறான கனவுகள் மூலம் நீங்கள் இறைவனுடன் இணைந்திருப்பதை இலகுவாக உணர முடியும்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |